இந்தியாவில் அமைகிறது மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை… சுமார் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு!!

ஐபோனுக்கான மிகப்பெரிய உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

big apple iphone manufacturing unit coming to india

ஐபோனுக்கான மிகப்பெரிய உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொபைல் போன் என்பது தற்போது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. அனைவர் கைகளிலும் தற்போது செல்போன் உள்ளது. அதற்கு ஏற்றார் போல மார்கெட்டிலும் புதுபுது வகையான மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் ஆப்பிள் ஐபோனுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம். அதிக விலை என்றாலும் ஐபோன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. அத்தகைய ஐபோன் தொழிற்சாலை சீனாவில் இயங்கி வருகிறது.

இதையும் படிங்க: இந்திய மாணவர்களுக்காக திறக்கப்படும் அமெரிக்க கதவுகள்! சீனாவுக்கு ‘ஷட்’

ஆனால் சீனாவில் தற்போது பல்வேறு நெருக்கடிகளால் ஐபோன் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஐபோனுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐபோன் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஓசூரில் மிகப்பெரிய உற்பத்தி ஆலை அமைய உள்ளதாக, மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் ஐபோனுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி பணியினை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க: ஷ்ரத்தா வாக்கர் கொலை; ஃபிரிட்ஜில் பிணம்; மற்றொரு காதலியுடன் உல்லாசம்; அதிர்ச்சி தகவல்கள்!

இதனிடையே ஓசூரில் அமைய உள்ள புதிய ஆலையில் மூன்று மாதங்களில் 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் ஒரே இடத்தில் 60,000 பேர் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக தொழிற்சாலையை டாடா குழுமம் விரிவுபடுத்த உள்ளதாகவும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை அருகே ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆலைகளில், ஐ-போன் 14 சீரிஸ் செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios