Explanation:ஷ்ரத்தா வாக்கர் கொலை; ஃபிரிட்ஜில் பிணம்; மற்றொரு காதலியுடன் உல்லாசம்; அதிர்ச்சி தகவல்கள்!
ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு நாட்டையே உலுக்கி இருக்கிறது. ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் அமீன் பூனாவாலா, தனது காதலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஜூன் மாதம் வரை பயன்படுத்தி, அவர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். மே 18 ஆம் தேதி நடந்த 26 வயது இளம் பெண்ணின் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி வருகின்றன.
காதலியின் உடலை 35 பாகங்களாக கடந்த மே 18ஆம் தேதி வெட்டியுள்ளார் அஃப்தாப் அமீன் பூனாவாலா. மறுநாள் 300 லிட்டர் ஃபிரிட்ஜ் வாங்கியுள்ளார். இதன் பின்னர் வெட்டிய பாகங்களை ஃப்ரிட்ஜில் கருப்பு நிற பாயிலில் சுற்றி வைத்துள்ளார். 20 நாட்களாக பல்வேறு இடங்களில் உடல் பாகங்களை வீசியுள்ளார்.
கூகுளில் ரத்தக் கறைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்று அஃப்தாப் அமீன் பூனாவாலா தேடியுள்ளார். மேலும், எவ்வாறு ஆதாரங்களை அழிப்பது என்றும் தேடியுள்ளார். இவையெல்லாம்தான் இவரை காட்டிக் கொடுத்துள்ளது. தொடர் கொலையாளியை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க "டெக்ஸ்டர்" தொடரால் அவர் ஈர்க்கப்பட்டதாகவும் போலீசில் தெரிவித்துள்ளார்.
இறுதியில், பூனாவாலாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். ஆனால், நவம்பர் 14ஆம் தேதி இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் இப்போது தான் கொடூர குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது மகளின் கொடூர கொலை குறித்து தந்தை கூறுகையில், ''ஒரே நாளில் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவன் என் எதிரில் இருந்தான். அவன் தான் ஷ்ரத்தாவை கொன்றதாக ஒப்புக்கொண்டான். என் மகள் இறந்துவிட்டாள் என்பதை அறிந்த பிறகு நான் உருக்குலைந்து போனேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என்னால், இந்த சம்பவத்தில் அனைத்தையும் கேட்கக் கூட முடியவில்லை. எனது மகள் இன்று இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை'' என்றார்.
போலீசார் எவ்வாறு கொலையாளியை கண்டறிந்தனர்?
டெல்லியில் கொலை நடந்ததுள்ளது. நவம்பரில் ஷ்ரத்தாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இறுதியில் ஷ்ரத்தா காணாமல் போனது டெல்லி என்பது தெரிய வந்தது. மேலும், இரண்டு மாதங்களாக தனது தொலைபேசி எண்ணை அஃப்தாப் அமீன் பூனாவாலா பயன்படுத்தவில்லை. இதையடுத்து, வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. ஷ்ரத்தாவின் போனை அஃப்தாப் அமீன் பூனாவாலா வீசியுள்ளார். இதுவும் துப்பு துலக்க உதவியுள்ளது. தற்போது, ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் லிவிங் டு கெதரில் இருந்த இவர்களிடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஷ்ரத்தா வாக்கரை கொன்ற பிறகும் பல பெண்களை டேட்டிங் ஆப்பில் பூனாவாலா தொடர்ந்து சந்தித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில், இருவரும் மலைப்பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இருவரும் சில நாட்கள் இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியுள்ளனர். அங்கு சத்தர்பூரில் வசித்து வரும் ஒருவரை சந்தித்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 2:00 மணிக்கு உடல் துண்டுகளை கருப்பு நிற பாயிலில் சுற்றி எடுத்துச் சென்றுள்ளார். இதை விசாரணையில் அஃப்தாப் அமீன் ஒப்புக் கொண்டார்.
ஷ்ரத்தாவை கொன்ற பிறகு உடலை வெட்டிய அதே அறையில் அஃப்தாப் அமீன் பூனாவாலா தினமும் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு முகத்தை தினமும் பார்த்து வந்துள்ளார். உடல் உறுப்புகளை அப்புறப்படுத்திய பிறகு அஃப்தாப் ஃப்ரிட்ஜ்ஜை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளார். துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக ஊதுபத்தி பயன்படுத்தியுள்ளார்.
அதே வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை வைத்திருந்த அதே ஃபிரிட்ஜில் தனது உணவையும் வைத்து சாப்பிட்டு வந்துள்ளார். கொலை நடந்த சில நாட்களுக்குப் பின்னர், வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளர். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகள் ஃபிரிட்ஜில் இருந்த நிலையில், அந்தப் பெண்ணையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இறந்த பெண்களின் உடல்களை போட்டோ எடுத்து ரசித்த நபர்… கர்நாடகாவில் நிகழ்ந்த பயங்கரம்!!
தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஃப்தாப் அமீன் பூனாவாலாவுக்கு பயங்கர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கைதியுடன் அடைக்கப்பட்டு இருக்கிறார். சிறை அறைக்கு வெளியே ஒரு போலீஸ்காரர் எப்போதும் அமர்ந்திருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார். போலீஸ் அதிகாரிகளும் வெளியே நடமாடி பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். லவ் ஜிகாத் பாணியிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.