காதலியை 35 துண்டுகளாக வெட்டிய கொடூரம்! பிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு பீஸாகப் புதைத்த இளைஞர் டெல்லியில் கைது
டெல்லியில் லிவ் இன் டுகெதரில் வாழ்ந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு, தொடர்ந்து 18 நாட்களாக தினசரி ஒவ்வொரு துண்டாக வனப்பகுதியில் புதைத்த கொடூர இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் லிவ் இன் டுகெதரில் வாழ்ந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு, தொடர்ந்து 18 நாட்களாக தினசரி ஒவ்வொரு துண்டாக வனப்பகுதியில் புதைத்த கொடூர இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டிய இளைஞர் பிரிட்ஜில் வைத்திருந்து தினசரி புதைத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள மெஹ்ராலி வனப்பகுதியில் நள்ளிரவு 2 மணிக்கு தினசரி சென்று ஒவ்வொரு துண்டாக பல்வேறு இடங்களில் காதலியின் உடலை அந்த இளைஞர் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
மும்பையைச் சேர்ந்தவர் ஷ்ரதா(வயது 26). இவர் பன்னாட்டு நிறுவனக் கால்சென்டரில் பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றியவர் அமீன் பூனாவல்லா. இருவரும் ஒன்றாகப் பணியாற்றியபோது காதல் வயப்பட்டனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சிறிது காலம் லிவ் இன் டுகெதர் உறவில் வாழ முடிவு செய்தனர்.
இதற்காக ஷ்ரதா தனது குடும்பத்தாரிடம் அனுமதி கோரினார். ஆனால், அதற்கு பெற்றோர் அனுமதிக்காததையடுத்து, ஷாரதா, பூனாவல்லாவுடன் டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மெஹ்ராலி பகுதியில் ஒரு அடுக்குமாடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாகத் தங்கினார்கள்.
இந்நிலையில் கடந்த மே மாதத்திலிருந்து ஷாரதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது, பெற்றோர் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, ஷ்ரதாவின் தந்தை டெல்லிக்கு வந்து அவர் வசித்த குடியிருப்புக்குச் சென்றார். ஆனால் குடியிருப்பு பூட்டியிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ஷ்ரதாவின் தந்தை மெஹ்ராலி போலீஸில்தனது மகளைக் காணவில்லை, கடத்தப்பட்டார் என்று பூனாவல்லா மீது புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து, அமீன் பூனாவல்லாவை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.
குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு புதிய சிக்கல்!சுயேட்சையாக களமிறங்கும் அதிருப்தியாளர்கள்
பூனாவல்லாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. விசாரணையில் பூனாவல்லாக கூறியதாக போலீஸார் கூறுகையில் “ ஷ்ரதாவுக்கும், பூனாவல்லாகுக்கும் உறவு நன்றாக சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் ஷ்ரதா தன்னை திருமணம் செய்யும்படி பூனாவல்லாவிடம் கூறி, வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு பூனாவல்லா சம்மதிக்கவில்லை. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததையடுத்து,கடந்த மே மாதம் 18ம் தேதி ஷ்ரதாவை பூனாவல்லா கொலை செய்தார்.
ஷாரதாவின் உடலை வைப்பதற்காக புதிதாக ஒரு பிரிட்ஜை விலைக்கு வாங்கியுள்ளார். ஷ்ரதாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, பூனாவல்லா பிரிட்ஜில் வைத்துள்ளார்.
தொடர்ந்து 18 நாட்களாக அதிகாலை 2 மணிக்கு ஷ்ரதாவின் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மெஹ்ராலி வனப்பகுதியில் பூனாவல்லா புதைத்துள்ளார். இதுபோன்று18 நாட்களாக 35 துண்டுகளையும் பூனாவல்லா புதைத்தார்” எனத் தெரிவித்தனர்