புத்தாடைகள், அழைப்பிதழ் அச்சடித்து நாய்களுக்குத் திருமணம் செய்த உரிமையாளர்கள்: ஹரியானாவில் ஸ்வாரஸ்யம்
ஹரியானா மாநிலம், குருகிராமில் நாய்களுக்கு புத்தாடை அணிவித்து, அழைப்பிதழ் அடித்து, விருந்துவைத்து, அதன் உரிமையாளர்கள் திருமணம் செய்து வைத்துள்ள சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமில் நாய்களுக்கு புத்தாடை அணிவித்து, அழைப்பிதழ் அடித்து, விருந்துவைத்து, அதன் உரிமையாளர்கள் திருமணம் செய்து வைத்துள்ள சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
மனிதர்களுக்குத் நடத்தப்படும் திருமணத்தைப் போன்றை பெண் நாய் உரிமையாளர், ஆண் நாய் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று முறைப்படி பேசி, திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த திருமணத்தைக் காண 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
ஜி20 உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பற்றி ஆலோசிப்பேன்:பிரதமர் மோடி அறிவிப்பு
ஷெரு(ஆண் நாய்), ஸ்வீட்டி(பெண் நாய்) ஆகிய இரு நாய்களுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்காக 100 அழைப்பிதழ்களை இரு உரிமையாளர்களும் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கியுள்ளனர். இது தவிர வாட்ஸ்அப், ஆன்லைனிலும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
குருகிராமில் உள்ள பாலம்விஹார் விரிவாக்கம், ஜைல் சிங் காலணியில் இந்த நாய் திருமணம் இன்று நடந்துள்ளது. பெண் நாய் ஸ்வீட்டியின் உரிமையாளர் ராணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ எனக்கு செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதால், என்னுடைய நாய் ஸ்வீட்டியே மகள் போல் வளர்க்கிறேன். என் கணவர் வழக்கமாக கோயிலுக்குச் சென்று அங்கு சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு வழங்குவார், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதுபோல் கோயிலுக்குச் சென்று திரும்பும்போது, என் கணவருடன் இந்த நாயும் சேர்ந்துவீட்டுக்கு வந்துவிட்டது.
தெலங்கானாவில் தாமரை மலரும்! மக்கள்தான் முக்கியம்! குடும்பம் அல்ல! கேசிஆர்-க்கு பிரதமர் மோடி விளாசல்
திரும்பிச் செல்ல மறுத்தது. அப்போது இருந்து எங்களுடனே இருக்கிறது. இதற்கு ஸ்வீட்டி என்று பெயரிட்டோம். அனைவருக்கும் ஸ்வீட்டிக்கு திருமணம் செய்து வையுங்கள் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, ஷெரு நாய்க்கு திருமணம் செய்ய முடிவுசெய்தோம்” எனத் தெரிவித்தார்
ஆண் நாய் ஷெரு-வின் உரிமையாளர் மணிதா கூறுகையில் “ கடந்த 8 ஆண்டுகளாக ஷெரு எங்களுடன் இருக்கிறது. எங்கள் குழந்தையைப் போல் வளர்க்கிறோம். ஷெரு நாய்க்கு திருமணம் செய்ய அனைவரும் கூறினார்கள், இதை சாதாரணமாக எடுத்த நிலையில் ஏன் திருமணச் சடங்கு நடத்தக்கூடாது எனத் தீவிரமாக யோசித்து இந்த முடிவை எடுத்தோம்.
இதற்காக பெண் நாய் உரிமையாளருடன் பேசி உண்மையான திருமணத்தைப் போல் நடத்த முடிவு செய்தோம். இந்த திருமணத்துக்காக இருதரப்பிலும் சேர்ந்து 100 அழைப்பிதல் அடித்து உறவினர்கள், நண்பர்களை அழைத்தோம்.
தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை கட்டம் கட்டும் பாஜக! ஜனசேனா, டிடிபியுடன் கூட்டணிக்கு ‘மாஸ்டர் பிளான்’
நாய்க்கு திருமண அழைப்பிதழ் கொடுத்தவுடன் சிலர் எங்களைப் பார்த்து கிண்டல் செய்தனர், சிலர் வாழ்த்தினார்கள். நாங்கள் எதையும் பொருட்டாகநினைக்கவில்லை. எங்களுக்கு விருப்பமானவற்றை செய்தோம்” எனத் தெரிவித்தார்
பெண் நாய் உரிமையாளர் ராணி கூறுகையில் “ நாய்களுக்கு திருமணம் செய்தால் போலீஸார் வழக்குப்பதிவு செய்வார்கள் எனச் சிலர் மிரட்டினார்கள். நாங்கள் கவலைப்படவில்லை. குழந்தைகள் இல்லாத எங்களுக்கு நாய்கள்தான் குழந்தை, எங்கள் ஸ்வீட்டிக்கு திருமணம் நடந்தது என் கணவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது”எனத் தெரிவித்தார்