ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா அறிவிப்பு; வசுந்தரா ராஜேவுக்கு வாய்ப்பு மறுப்பு!
ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். அனைத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் பஜன்லால் சர்மாவை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமாண சமூகத்தைச் சேர்ந்த பஜன்லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தின் தலைநகரான ஜெயப்பூரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் பஜன்லால் சர்மாவை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்று தெரியாமல் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், 2013 முதல் 2018 வரை பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே மீண்டும் முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நிலவியது.
புதிய முகம் ஒருவரையே பாஜக முதல்வராகத் தேர்வு செய்யும் என்று பரவலான கருத்து நிலவிவந்தது. இருப்பினும் ராஜஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவரான வசுந்தரா ராஜேவுக்கு அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் அவரும் முதல்வராகும் ரேஸில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதுமுகமான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த மாநிலத்தில் 10 நாட்களாக நீட்டித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT ஷோ எது? டாப் டென் பட்டியல் இதோ!
2023 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாகயாக எம்எல்ஏ ஆகியிருக்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான பஜன்லால் சர்மாவை பாஜக முதல்வராக அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.
சங்கனர் தொகுதியின் எம்எல்ஏ ஆகியிருக்கும் பஜன்லால் சர்மா கட்சியின் ராஜஸ்தான் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். இவருடன் தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா இருவரும் துணை முதல்வர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகர் பதவி வாசுதேவ் தேவனானிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "ராஜஸ்தான் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, பஜன்லால் சர்மாவை சட்டமன்றக் கட்சியின் தலைவராக முன்மொழிந்தார். அனைவரும் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்" என்றார்.
ராஜஸ்தானில் ஒரே கட்டமாக நடந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. 199 தொகுதிகளில் 115 இடங்களைக் கைப்பற்றிய பாஜக அறுதிப் பெரும்பான்மையும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
பாலஸ்தீன மக்களை கண்ணைக் கட்டி நிர்வாணமாகக் கூட்டிச் சென்ற இஸ்ரேல் ராணுவம்!