Asianet News TamilAsianet News Tamil

பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 10,000 டாலர் முதலீடு! இன்ப அதிர்ச்சி ட்வீட் போட்ட சிஇஓ!

பெங்களூருவில் செயல்பட்டுவரும் மேட்ரிமோனி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒருவர் திடீரென 10 ஆயிரம் டாலர் முதலீடு செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ பவன் குப்தா சொல்கிறார்.

Bengaluru Landlord Invests $10,000 In Tenant's Startup, Internet Is Stunned
Author
First Published Jun 3, 2023, 8:13 PM IST

பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று கருதப்படுகிறது. இந்தியாவின் ஐடி துறையை கட்டியெழுப்புவதற்கான விரைவான வளர்ச்சி மற்றும் பங்களிப்பு காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது. இருப்பினும், தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ச்சியாக பணிநீக்க நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில்,  அத்துறையில் வேலைவாய்ப்புகள் நிச்சயமற்றவையாக உள்ளன.

இந்நிலையில், பெட்டர்ஹாஃப் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பவன் குப்தா ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. சிங்கிளாக இருப்பவர்களுக்கு திருமணத்துக்கு ஏற்ற ஜோடியைக் கண்டுபிடிக்க உதவும் மேட்ரிமோனி ஆப் தான் பெட்டர்ஹாஃப். இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட முதல் மேட்ரிமோனி ஆப் ஆகவும் உள்ளது.

“மதம் என பிரிந்தது போதும்.. ஒடிசா ரயில் விபத்து! ரத்தம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்” - நெகிழ்ச்சி சம்பவம்

Bengaluru Landlord Invests $10,000 In Tenant's Startup, Internet Is Stunned

இந்த நிறுவன அலுவலகத்தின் உரிமையாளர் சுஷில் திடீரென பவன் குப்தாவுக்கு 10,000 டாலர் முதலீட்டை அனுப்பிவைத்துள்ளார். சுஷில் இந்தத் தகவலை பவன் குப்தாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜில் தெரிவித்திருக்கிறார். அதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த பவன் குப்தா அந்த உரையாடலை அப்படியே ட்வீட்டாக பதிவிட்டுள்ளார்.

அதில் அலுவலக உரிமையாளர் சுஷில், "நான் உங்களிடம் முதலீடு செய்கிறேன், நிஜமாகத்தான். ஆல் தி பெஸ்ட். நீங்கள் மிகப்பெரிய உயரங்களை அடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். இதற்கு உடனடியாக பதிலளித்த பவன் குப்தா, "நன்றி, சுஷில்" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து 10,000 டாலரை முதலீட்டை அனுப்பிவிட்டதாவும் சுஷில் உறுதி செய்துள்ளார்.

"எங்கள் வாழ்நாளில் இவ்வளவு உடல்களை பார்த்ததில்லை": ஒடிசா தீயணைப்பு அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்..

"கடினமான சூழலில், நான் எதிர்பாராத வகையில் எனது அலுவலக உரிமையாளர் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளார். அவர் சமீபத்தில் எனது ஸ்டார்ட்அப் நிறுனவமான பெட்டர்ஹாஃப் இல் 10 ஆயிரம் டாலர் முதலீடு செய்துள்ளார். பெங்களூருவில் உள்ள அனைவரும் இவ்வாறு தொழில்முனைப்புடன் இருப்பது வியப்பளிக்கிறது. இது இந்தியாவின் சிலிக்கான் வேலிதான்" என பவன் குப்தா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். #peakbengalurumoment என்ற ஹேஷ்டேகையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்த ட்வீட் வைரல் ஆனதால் பலரும் பவன் குப்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தொடங்கினர். இன்னும் பலர் 10 ஆயிரம் டாலர் முதலீடு செய்த சுஷிலை பாராட்டினர்.

அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் லைட்ஹவுஸ்கள்! இலவசமாகவும் கிடைக்குமாம்!

Follow Us:
Download App:
  • android
  • ios