இந்த வாரம் பெங்களூருவில் வெப்பநிலை 32°C-ஐ தாண்டும் என்று IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும், வெயில் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், லேசான ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளில் குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கிவிட்டது. தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த வாரம் ஒவ்வொரு நாளும் அதிகபட்ச வெப்பநிலை 32°C-க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, நகரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32.8°C ஆக பதிவானது, இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 32.1°C ஆக சற்று குறைந்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 17.39°C ஆக உள்ளது.
பெங்களூருவில் இதற்கெல்லாம் தண்ணீரை பயன்படுத்தினால் ₹5,000 அபராதம்! அரசு உத்தரவு!
மாநில வானிலை ஆய்வு மையத்தின்படி, அடுத்த சில நாட்களுக்கு பெங்களூருவின் வெப்பநிலை:
- புதன் – அதிகபட்சம்: 32.26°C, குறைந்தபட்சம்: 18.77°C
- வியாழன் – அதிகபட்சம்: 32.54°C, குறைந்தபட்சம்: 19.06°C
- வெள்ளி – அதிகபட்சம்: 32.25°C, குறைந்தபட்சம்: 19.12°C
- சனி – அதிகபட்சம்: 32.66°C, குறைந்தபட்சம்: 19.61°C
- ஞாயிறு – அதிகபட்சம்: 32.19°C, குறைந்தபட்சம்: 18.63°C
வெப்பநிலை அதிகமாக இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். IMD மக்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளது:
- நிறைய தண்ணீர் குடித்து நீர்ச்சத்தை அதிகரிக்கவும்.
- பிற்பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்
- லேசான, காற்றோட்டமான ஆடைகளை அணியவும்
- வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன், குடை அல்லது தொப்பி பயன்படுத்தவும்
காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி! ஒரு கிலோ காபி தூள் 1000 ரூபாய்க்கு மேல் உயர்கிறது!
வெப்பநிலை திடீரென அதிகரிப்பது பெங்களூருவில் கோடைக்காலம் விரைவில் தொடங்குவதைக் குறிக்கிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
