Asianet News TamilAsianet News Tamil

போலீஸ் இருக்காங்க.. பாத்து போங்க.. டிராபிக் விதிகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் கூகுள் மேப்!

ஹெல்மெட் அல்லது லைசென்ஸ் இல்லாமல் அந்த திசையில் பயணித்தால், இந்த அலர்ட்டைப் பார்த்து வேறு பாதையில் சென்று தப்பித்து விடுவார்கள். இந்த யோசனை வேடிக்கையாகத் தோன்றினாலும், விதிமீறலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரிடம் இருந்து காப்பாற்றுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.

Bengaluru Google Maps warns people where the cops are with 'police irtare' landmarks, internet in splits sgb
Author
First Published Jul 9, 2024, 8:54 PM IST | Last Updated Jul 9, 2024, 9:00 PM IST

கூகுள் மேப் வழி தவறாமல் தவிப்பர்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்குச் செல்ல உதவி செய்யும் வழிகாட்டியாக இருக்கிறது. புதிய இடத்திற்குச் செல்பவர்களுக்கு முகவரியையும் கண்டுபிடிக்க கூகுள் மேப் வரப்பிரசாதமாக உள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அடையாளம் தெரியாத நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை எச்சரிப்பதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வழக்கமாக விதிமீறல் செய்பவர்களைப் பிடிக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபடும் இடங்களை கூகுள் வரைபடத்தில் குறித்துள்ளனர்.

போக்குவரத்து காவலர்கள் தினமும் காலையில் சாலை விதிகளை மீறுபவர்களை தடுத்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. சாலை விதிகள் அதிகமாக மீறப்படும் பகுதிகளைத் தேர்வு செய்து அங்கு கண்காணிப்பை பலப்படுத்துகிறார்கள். பலர் சிக்கியதும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காணலாம்.

புதிய ட்ரெண்டாக மாறிய Naked Resignation! அப்டீன்னா என்ன தெரியுமா? ரிஸ்க் எடுக்க ரெடியா?

இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சாலையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்க போலீசார் வழக்கமாக செக்கிங்கில் ஈடுபடும் பகுதிகளைக் கூகுள் மேப்பில் குறித்துள்ளனர். கூகுள் வரைபடத்தில் சில இடங்களில் "இங்கே போலீஸ் இருக்காங்க" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த பயனர் ஒருவர் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 'போலீஸ் இர்தாரே, நோட்கோண்ட் ஹோகி' (போலீஸ் இருக்காங்க. பார்த்து போங்க) என்று கன்னடத்தில் அலர்ட் மெசேஜ் கொடுத்திருப்பதைக் காண முடிகிறது. இந்தப் பதிவி வைரலாகப் பரவி வருகிறது. பலரும் இது குறித்து பதிலளித்து வருகின்றனர்.

ஹெல்மெட் அல்லது லைசென்ஸ் இல்லாமல் அந்த திசையில் பயணித்தால், இந்த அலர்ட்டைப் பார்த்து வேறு பாதையில் சென்று தப்பித்து விடுவார்கள். இந்த யோசனை வேடிக்கையாகத் தோன்றினாலும், விதிமீறலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினரிடம் இருந்து காப்பாற்றுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.

வேறு சில நெட்டிசன்கள்  இதற்கு ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளனர். பொதுமக்களாக சேர்ந்து உருவாக்கிய அவசர உதவி சேவை இது என்று பாராட்டியுள்ளனர். தொழில்நுட்ப வசதியை வித்தியாசமாக பயன்படுத்துவதைப் பார்த்து வியப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

கொள்ளை அழகில் மயக்கும் அம்பானி வீட்டு மருமகள்! பூவால் நெய்த ஆடையில் ராதிகா மெர்ச்சண்ட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios