புதிய ட்ரெண்டாக மாறிய Naked Resignation! அப்டீன்னா என்ன தெரியுமா? ரிஸ்க் எடுக்க ரெடியா?

இப்போது பல துறை பணியாளர்கள் மத்தியில் Naked Resignation போக்கு அதிகமாகி வருகிறது. இந்த புதிய ட்ரெண்டில் உள்ள ரிஸ்க் என்னென்ன என்று பார்க்கலாம்.

What is naked resignation, why are professionals opting for it, what are the risks involved sgb

உலகெங்கிலும் உள்ள இளம் தொழில் வல்லுநர்களிடையே ஒரு புதிய போக்கு உருவாகி உள்ளது. பலர் புதிய வேலை கிடைப்பதற்கு முன்பே, தற்போது இருக்கும் வேலையை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்கள். "Naked Resignation" என்று அழைக்கப்படும் இந்தப் போக்கு பொருளாதார ரீதியான உறுதியற்ற தன்மை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற ஆபத்தில் கொண்டுபோய் விடக்கூடும். பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இடைவிடாத வேலை நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான விருப்பம் அதிகரித்துள்ளதையும் காட்டுகிறது.

Naked Resignation பணிச்சூழலில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை அளிக்கும் அதே வேளையில், பொருளாதார ரீதியாக உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும். வேலைச் சந்தையில் மீண்டும் நுழைவதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நீண்ட காலம் வேலை இல்லாமல் இருப்பது புதிய வேலையில் சேர்வதற்கான வாய்ப்பையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இந்த அபாயங்கள் இருந்தாலும், அதிகமான இளம் தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழிலை விட நல்வாழ்வையே முதன்மையானதாகக் கருதி வேலையை உதற தயாராகின்றனர்.

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கொடுக்கும் தமிழக அரசு! உடனே அப்ளை பண்ணுங்க ப்ரோ!

பிரபலமாகும் போக்கு:

வெய்போ மற்றும் சியாஹோங்ஷு போன்ற சீன சமூக வலைத்தளங்களில் "Naked Resignation" என்ற வார்த்தை பிரபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்கள் பணி அனுபவங்களையும் ராஜினாமாவுக்குப் பிந்தைய திட்டங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். பலர் தாங்கள் ராஜினாமா செய்திருப்பதை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அறிவித்து புதிய வாய்ப்புகளை ஆராய்கின்றனர்.

இளைஞர்கள் ராஜினாமா செய்த பின்பு கிடைக்கும் இந்த நேரத்தை தனிப்பட்ட ஆர்வங்கள் சார்ந்து செலவிடுகிறார்கள். புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். பயணங்களை மேற்கொள்ளவதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, 28 வயதான வெய்போ பயனர் ஒருவர் தனக்கு சம்பள உயர்வு பெற்ற பிறகு ராஜினாமா செய்தார். வேலையை விட்ட பிறகு ஆங்கிலம் கற்றல், உடல் தகுதி மேம்படுத்தல், சமையல் செய்ய பழகுதல், பயணங்கள் ஆகியவற்றை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், முன்கூட்டியே திட்டமிடாமல் ராஜினாமா செய்வதில் சவால்கள் இல்லாமல் இல்லை. புதிய வேலைவாய்ப்பைக் கண்டறிவதில் உள்ள சிரமங்கள் அதிகம். இந்தப் போக்கு குறிப்பாக தொழில்நுட்ப துறையில் உள்ளவர்களிடையே பிரபலமாக உள்ளது. வாரத்தில் 6 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்யும் "996" வேலை கலாச்சாரத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு தங்கள் பணி தொடர்பான ஆர்வமின்மையும் சோர்வும் உண்டாகிறது.

கலைஞர் முன்பு அஜித் பேசிய பேச்சுக்கு இந்தச் சம்பவம் தான் காரணமாம்! வைரலாகும் புதிய அப்டேட்!

வாழ்க்கை மாற்றம்:

Naked Resignation போக்கு வேலை மற்றும் வாழ்க்கை மீதான இளைய தலைமுறையினரின் அணுகுமுறை வெகுவாக மாற்றம் அடைந்திருப்பதை உணர்த்துகிறது. தொழிலில் சாதிப்பதை விட சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறார்கள். பழைய தலைமுறையினர் இந்தப் போக்கை எதிர்மறையாகப் பார்க்கிறார்கள். ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் வேலைக்குப் போகாதபோது சுய முன்னேற்றம் தொடர்பான செயல்களுக்கு அதிகளவில் முன்னுரிமை அளிக்க நினைக்கின்றனர்.

பொருளாதார வீழ்ச்சி, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது ஊரடங்கு ஆகியவை இந்த போக்கைத் தொடங்கி வைத்திருப்பதாக கருகின்றனர். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்து, வாழ்க்கையில் புதிய அர்த்தத்தைத் தேடத் தொடங்கியுள்ளனர். இதில் அபாயங்கள் இருந்தாலும், நிறைவான வாழ்க்கை மீது உள்ள ஆசையால் Naked Resignation முடிவுக்கு வருகிறார்கள்.

சில்க் ஸ்மிதா ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சு ஜெயிச்சு இருக்காங்க: நடிகர் மோகன் நெகிழ்ச்சி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios