Asianet News TamilAsianet News Tamil

தனது வருமானத்தை குறைத்து காட்டியதை ஒப்புகொண்ட பிபிசி இந்தியா.. எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல போகின்றன?

மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு  அனுப்பிய மின்னஞ்சலில் ரூ. 40 கோடி வருமானத்தை குறைத்து அறிக்கை தாக்கல் செய்ததாக பிபிசி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC India has admitted that it understated its income.. What will the opposition parties say?
Author
First Published Jun 6, 2023, 2:45 PM IST

பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, 2002 குஜராத் கலவரம் வெடித்தது. இந்த சூழலில் இந்த கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி பிரிட்டனை தளமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம், மோடிக்கான கேள்விகள் என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி, பல இடங்களில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள பிபிசிக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இது பிபிசிக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை என்றும், பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான வெட்கக்கேடான செயல் என்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

பிரக்யா தாக்கூருடன் கேரளா ஸ்டோரி படம் பார்த்த பெண் முஸ்லிம் காதலருடன் மாயம்!

இந்த நிலையில் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளை பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காட்ட பிபிசி இந்தியா வேண்டுமென்றே முயற்சித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பிபிசி திருத்தப்பட்ட வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். பிபிசி இந்தியா நிலுவைத் தொகையையும் அபராதத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு பல கோடி ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் பிபிசி மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு  அனுப்பிய மின்னஞ்சலில் ரூ. 40 கோடி வருமானத்தை குறைத்து அறிக்கை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிபிசி இந்தியா நிறுவனத்தால் காட்டப்படும் லாபம் மற்றும் வருமானம் நாட்டின் செயல்பாடுகளின் அளவிற்கு ஏற்ப இல்லை என்று சோதனை நடத்திய போது வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

முன்னதாக பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியது மற்றும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தின் அடையாளம் என்று விமர்சித்தது. சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் வருமான வரித்துறை பிபிசி அலுவலகங்களில் நடத்திய சோதனையை கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த சூழலில் தனது நிறுவனத்தின் வருமானத்தை குறைத்து காட்டியதாக பிபிசி நிறுவனம் ஒப்புக்கொண்டதால், எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல போகின்றன என்ற எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

பெண்கள் இலவச பேருந்து பயணம்: யாரெல்லாம் பயணிக்கலாம்? - வழிமுறைகள் வெளியீடு!

Follow Us:
Download App:
  • android
  • ios