பதிண்டா ராணுவ முகாமில் நடந்தது என்ன? வெளியானது புதிய தகவல்கள்!!
பதிண்டா ராணுவ முகாமில் நேற்று நடந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இது ராணுவ முகாமில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட சதி என்று ராணுவ அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருக்கும் ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சேலத்தைச் சேர்ந்த கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் கமலேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒன்றரை மாத விடுப்பை கழித்து விட்டு ராணுவத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியாக ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மேலும் ஒருவர் தனது துப்பாக்கியை தவறுதலாக பயன்படுத்தியதில் குண்டு காயங்கள்பட்டு உயிரிழந்து இருப்பதாக ராணுவம் தெரிவித்து இருந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.
இந்த சம்பவம் ராணுவ அதிகாரிகளுக்கான மெஸ் பின்புறம் இருக்கும் ஆயுத யூனிட்டில் நடந்து இருந்தது. இதுகுறித்து பஞ்சாப் போலீசில் புகார் அளித்து இருந்த ராணுவம், ''முகமூடி அணிந்த இருவர் வந்தனர். அவர்கள் இருவரும் வெள்ளை நிற குர்தா பைஜாமா ஆடை அணிந்து இருந்தனர். இவர்கள் அருகில் இருக்கும் வனத்திற்குள் ஓடுவது தெரிய வந்தது. ஒருவரிடம் 5.56 எம்எம் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இந்த துப்பாக்கியும், 28 தோட்டாக்களும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்தது. மற்றொருவரிடம் அருவாள் இருந்தது'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.
ஸ்டார்ட் அப்கள் மூலம் 40 லட்சம் பேருக்கு வேலை: ரோஜ்கர் மேளாவில் பிரதமர் மோடி தகவல்
''சகோதரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். முந்தைய சம்பவங்கள் போல் இல்லாமல் தற்போது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இது தீவிரவாத தாக்குதல் இல்லை. எந்த வகையிலும் ராணுவ முகாமிற்குள் பாதுகாப்பை மீறி நுழைய முடியாது. ராணுவ மையத்திற்குள் பொது வாகனங்கள் நுழைய முடியாது. பெரிய அளவில் சுற்றுச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன.
உள்ளே இருப்பவர்களில் இருவர் சேர்ந்து இதை நடத்தி இருக்க வேண்டும். அவர்களுக்குள் ஏற்பட்டு இருக்கும் விரோதத்தால் நடந்திருக்கலாம். வெளியில் இருந்து யாரும் வரவில்லை. ஆனால் எதையும் தற்போது உறுதியாக கூற முடியாது. விசாரணை நடந்து வருகிறது. யாரும் நேற்று மாலை வரை கைது செய்யப்படவில்லை. ஆனால் ஐஎன்எஸ்ஏஎஸ்-க்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பதிண்டாவில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு; தற்கொலையா?