ஸ்டார்ட் அப்கள் மூலம் 40 லட்சம் பேருக்கு வேலை: ரோஜ்கர் மேளாவில் பிரதமர் மோடி தகவல்
71 ஆயிரம் பேருக்கு பணி நியமன் ஆணை வழங்கும் ரோஜ்கர் மேளாவில் பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்ட்அப்கள் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஸ்டார்ட்அப்கள் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளன என பிரதமர் மோடி ரோஜ்கர் மேளா நிகழ்வில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
ரோஜ்கர் மேளா திட்டத்தில் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனகளில் உள்ள பணிகளுக்குப் புதிதாகப் தேர்வு செய்யபட்ட சுமார் 71,000 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்வில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துகொண்டு புதிதாகப் பணி நியமன ஆணைகளை விநியோகித்தார்.
ஸ்டாலின் சொத்து மதிப்பு என்ன? முதல்வர்களின் சொத்து விவரத்தை வெளியிட்டது ஏஆர்டி அறிக்கை
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பயனாளர்கள் வேலை பெறுகிறார்கள். ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுண்டன்ட், தபால் உதவியாளர், வரி ஆய்வாளர், வரி உதவியாளர், மூத்த வரைவாளர், ஜே.இ / மேற்பார்வையாளர், உதவிப் பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், தகுதிகாண் அதிகாரிகள், PA, MTS, உள்ளிட்ட பல பதவிகளில் பணிபுரிய உள்ளனர்.
இந்த நிகழ்வின்போது உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்த நன்னாளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. உங்கள் அனைவரின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் நாட்டில் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாகியுள்ளன" என்றார்.
"2014 க்குப் பிறகு, இந்தியா ஒரு செயல்திறன் மிக்க அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது. இது வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது. இதை யாரும் இதற்கு முன் கனவு காணவில்லை. பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி மட்டுமே செய்ய முடியும் என்ற அணுகுமுறையை நமது அரசு மாற்றியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இதுபோன்ற 300 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆயுதங்களின் பட்டியலை நமது பாதுகாப்புப் படையினர் தயாரித்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டார்.
டிசிஎஸ் லாபம் 14.8 சதவீதம் உயர்வு; 4்வது காலாண்டு அறிக்கையில் தகவல்