டிசிஎஸ் லாபம் 14.8 சதவீதம் உயர்வு; 4்வது காலாண்டு அறிக்கையில் தகவல்
ஜனவரி - மார்ச் வரையிலான இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.11,392 கோடியாபக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தைவிட 14.8 சதவீதம் அதிகம். நிறுவனத்தின் வருவாயும் 16.9% அதிகரித்து 59,162 கோடியாகக் கூடியிருக்கிறது.
டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
முந்தைய டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டின் லாபம் ரூ.10,846 கோடியாக இருந்தது. ஜனவரி - மார்ச் வரையிலான இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.11,392 கோடியாபக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தைவிட 14.8 சதவீதம் அதிகம். நிறுவனத்தின் வருவாயும் 16.9% அதிகரித்து 59,162 கோடியாகக் கூடியிருக்கிறது.
2022-23 நிதியாண்டிற்கான இறுதி டிவிடென்ட்டையும் டிசிஎஸ் அறிவித்துள்ளது. இதனால் இன்று அதன் பங்குகள் சுமார் மதிப்பு உயர்வ கண்டுள்ளன.
நான்காம் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மதிப்பு கொண்ட ஆர்டர்கள் வந்துள்ளன. இதன் மூலம் நிறுவனத்தின் ஆர்டர் புக் மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது. இந்நிறுவனத்தின் க்ளைன்ட்களின் ஆர்டர் சராசரியாக ரூ.800 கோடிக்கு மேல் உள்ளது.
மார்ச் 2023 காலாண்டில், நிகர லாப வரம்பு 19.3 சதவீதமாக உள்ளது. முந்தைய காலாண்டில் இது 18.6 சதவீதமாக இருந்தது. 2022 டிசம்பரில் முடிந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, ஆபரேட்டிங் மார்ஜின் 24.5 சதவீதமாக உள்ளது.
கடந்த 2022-23 நிதியாண்டில் எங்களின் வலுவான வளர்ச்சியை திரும்பிப் பார்க்கும்போது, மிகவும் திருப்தி அளிக்கிறது என்று டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறியுள்ளார்.