ayodhya sadhus gang rape a woman for 1 year

பெண்ணையும் அவரின் மகளையும் கூட்டு பலாத்காரம் செய்த 5 சாதுக்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய பைசாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தி ஜானகி நிவாஸ் கோயில் பகுதியைச் சேர்ந்த பெண்ணும், அவரின் மகளும் கடந்த வாரம் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் 5 சாதுக்கள் மீது புகார் அளித்தனர். அதில் ஜானகி நிவாஸ் கோயிலில் இருக்கும் 5 சாதுக்கள் தன்னை கடந்த ஒரு ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர், இது குறித்து வெளியே கூறினார் சபித்து விடுவேன் எனக் கூறி மிரட்டினர். கடந்த சில நாட்களுக்கு எனது மகளையும் பாலியல் பலாத்கம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்மகள் இருவரும் புகார் அளித்தனர்.

ஆனால், இந்த புகாரை ஏற்க மறுத்த போலீசார், சுதாமா தாஸ், சஞ்சய் தாஸ், ராம்குமார்தாஸ், குல்சன் தாஸ், ரகுவர் ஆகிய 5 சாதுக்கள் மீது வழக்கு பதிவுசெய்ய மறுத்தனர்.

இதையடுத்து பைசாபாத் நீதிமன்றத்தில் அந்த பெண்ணும், அவரின் மகளும் மனு செய்து, 5 சாதுக்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரினர். இதை விசாரணை செய்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராஜேஷ் பராசர், 5 சாதுக்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த அயோத்தி போலீசாருக்கு உத்தரவிட்டார்.