Asianet News TamilAsianet News Tamil

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா: 84 நொடிகள் மட்டுமே நீடிக்கும் மங்கள நேரம்..

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான உண்மையான 'முஹூர்த்தம் அல்லது மங்களகரமான நேரம் 84 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.

Ayodhya Ram mandir Pran Pratishtha all about mool muhurat to last 84 seconds Rya
Author
First Published Jan 22, 2024, 11:19 AM IST

ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் இன்னும் சற்று நேரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8000 விஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மகா கும்பாஷேகத்தின் முக்கிய சடங்குகளை வாரணாசியின் பிரதான பூசாரி லக்ஷ்மி காந்த் தீட்சித் செய்ய உள்ளார். இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பிரதமர் மோடியும் சில முக்கிய சடங்குகளை செய்ய உள்ளார். அதன்படி சிலைக்கு மை பூசுவது, தெய்வத்திற்கு சிறிய கண்ணாடியை காண்பிப்பது உள்ளிட்ட முக்கிய சடங்குகளை பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த மகா கும்பாபிஷேக விழா மங்கள இசையுடன் தொடங்கி உள்ளது.  25 மாநிலங்களில் இருந்து இசைக்கருவிகள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இசைக்கப்பட உள்ளன. ஆனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான உண்மையான 'முஹூர்த்தம் அல்லது மங்களகரமான நேரம் 84 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.

காசியைச் சேர்ந்த ஜோதிடரான பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட்,  ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படும் தருணத்தை மிகவும் துல்லியமாக கணித்தார். இந்த நல்ல தருணம் 12:29:08 முதல் 12:30:32 வரை 84 வினாடிகள் மட்டுமே நீடிக்க உள்ளது.

84 வினாடிகள் நீடிக்கும் "மூல் முஹூர்த்தத்தின்" போது, பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சிறிய தங்கக் குச்சியால் மைப் பூசி, சிலையைத் திறந்து வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் தெய்வத்திற்கு ஒரு சிறிய கண்ணாடியைக் காண்பிப்பார், அதைத் தொடர்ந்து 108 தீயங்களால் ஒளிரும் 'மஹா ஆர்த்தி உடன் கும்பாபிஷேக விழாவை நிறைவு செய்ய உள்ளார்.

எனக்கும் அழைப்பு வந்துருக்கு.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகிறேன்.. நித்தியானந்தா பரபரப்பு ட்வீட்..

இதை தொடர்ந்து கோயிலின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் ஈடுபட உள்ளார், மேலும் பழமையான சிவன் கோயிலை புனரமைத்த குபேர் திலாவு என்ற இடத்திற்கும் பிரதமர் மோடி செல்கிறார்.

அங்குள்ள சன்னதியில் நடைபெறும் பூஜையில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார்.  பல்வேறு சமூக குழுக்களில் இருந்து 15'எஜமானர்கள் பிரதமருடன் செல்வார்கள். பிரதமர் மோடி, இந்த விழாவுக்காக சுமார் மூன்றரை மணி நேரம் வளாகத்திற்குள் இருப்பார் என்றும், அதைத் தொடர்ந்து ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு அயோத்தி பிரதிஷ்டை விழாவின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த விழாவை தொடர்ந்து, நாளை முதல் ராமர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஜனவரி 27 க்குப் பிறகு கோயிலுக்கு வருமாறுமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த திறப்பு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் அருகில் இருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக 15,000 போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் திங்கள்கிழமை களமிறக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் முக்கிய மொழிகளில் 400 அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளது. அங்கு கடுங்குளிர் நிலவுவதால், 300 இடங்களில் எரிவாயு மூலம் இயங்கும் ஹீட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அயோத்தி ராமர் கோயில் விண்வெளியில் இருந்து எப்படித் தெரிகிறது தெரியுமா? இஸ்ரோ வெளியிட்ட படம்!

முக்கிய பிராந்திய மொழிகளில் பேசும் வழிகாட்டிகள், அவசரநிலைக்கு காவலர்கள் மற்றும் துணை மருத்துவ உதவியாளர்களுடன் சுற்றுலா வசதி மையங்கள் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. உயர்தர ஹோட்டல்களுடன், 1,200 செயல்பாட்டு தங்குமிடங்கள் மற்றும் 25,000 படுக்கைகள் கொண்ட கூடாரம் உட்பட எட்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரம்மாண்ட விழாவில் 50 நாடுகளை பிரதிநிதிகள், உட்பட 7000 க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை குடியரத்து தலைவர் வெங்கையா நாயுடு, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, லக்ஷ்மி மிட்டல், கெளதம் அதானி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே. இருப்பினும், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி கலந்து கொள்ளவில்லை., மேலும் அயோத்தி உரிமை வழக்கில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட 38 வழக்கறிஞர்கள் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios