கர்நாடக மாநிலம் தாவணகெரேயில், வீட்டில் விடுவதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்ற 16 வயது சிறுமியை, ஓட்டுநரும் அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் புகாரின் பேரில், இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் பேருந்து நிலையத்துக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது சிறுமி, தனது தம்பியுடன் வந்துள்ளார். பேருந்துக்காக இருவரும் காத்திருந்தனர். அப்போது ஆட்டோ ஒட்டுநர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவர் தான் வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதாக கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பி அந்த சிறுமி மற்றும் அவரது தம்பியும் ஆட்டோவில் ஏறினார்.
சிறிது தூரம் சென்றதும், அந்த ஆட்டோவில் மற்றொருவர் ஏறியுள்ளார். அப்போது எனது நண்பர் என்று ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று சிறுமி மற்றும் தம்பியை தாக்கியது மட்டுமல்லாமல் அவனை கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமியை இருவரும் சேர்ந்து மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் சிறுமியிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். ஒரு வழியாக சிறுமி தனது தம்பியை மீட்டுக் கொண்டு அங்கிருந்து மீண்டும் தாவணகெரே டவுனில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த சில வியாபாரிகளின் உதவியுடன் அந்த சிறுதி நடந்த சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அப்பகுதி பொருத்தப்பட்டிருந்தத சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனரையும், அவரது நண்பரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை என்று கூட பாராமல் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
