Asianet News TamilAsianet News Tamil

சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்... கோவாவில் உச்சகட்ட பரபரப்பு!!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

attack with deadly weapons on the family who went on a Goa trip
Author
First Published Mar 16, 2023, 5:58 PM IST

கோவாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஜதின் ஷர்மா என்பவர் தனது குடும்பத்தினருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு தனது குடும்பத்துடன் தங்குவதற்காக அஞ்சுனாவில் உள்ள நட்சத்திர விடுதியை தேர்வு செய்துள்ளனர். அதில் அறையும் எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் அவரது அறைக்குள் இரவு நேரத்தில் புகுந்த நான்கு பேர், ஜதின் ஷர்மா குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், வாள், கத்தி போன்றபயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் ஜதின் ஷர்மா பலத்த காயமடைந்தனர்.

இதையும் படிங்க: பெங்களூரு ரயில்நிலைய டிரம்மில் சடலம் கிடைத்த வழக்கு! முக்கிய துப்பு துலக்கிய போலீசார்!

attack with deadly weapons on the family who went on a Goa trip

பின்னர் ரத்தப்போக்கு அதிகரித்ததால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து ஜதின் ஷர்மா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து நடந்த சம்பவம் குறித்து ஜதின் ஷர்மா குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் தெரிவித்ததோடு தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்களையும் பகிர்ந்தனர். இதன் மூலம் இந்த தாக்குதல் சம்பவம் வெளிசத்திற்கு வந்தது. இதை அடுத்து அந்த விடுதி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: 56,000 ஹெல்மெட்கள் வழங்கி 30 உயிர்களைக் காப்பாற்றிய இந்தியாவின் ஹெல்மெட் மேன்; யார் இவர்?

attack with deadly weapons on the family who went on a Goa trip

மேலும் அஞ்சுனா போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் சுற்றுலா வந்த வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை கைது செய்தனர்.  மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios