Asianet News TamilAsianet News Tamil

Drum Murder Case : பெங்களூரு ரயில்நிலைய டிரம்மில் சடலம் கிடைத்த வழக்கு! முக்கிய துப்பு துலக்கிய போலீசார்!

பெங்களூரு ரயில்நிலைய டிரம்மில் இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Drum Murder Case The police said that this case was not connected to two similar cases in Bengaluru.
Author
First Published Mar 16, 2023, 3:53 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூரு சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில்நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு டிரம்மில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதைக் கண்ட ரயில்வே பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சோதனை செய்ததில் அதில் 20 வயது கொண்ட இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெங்களூரு ரயில் நிலையத்தில் இது போன்று பெண் சடலம் கண்டெடுக்கப்படுவது 3வது முறையாகும். முன்னர் நடந்த சம்பவங்களில் போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை செய்துள்ளனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.கே.சௌம்யலதா, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி, கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் மைத்துனர் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். இக்கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தகாத உறவில் இருந்த மனைவியை தட்டிக்கேட்ட கணவன் கொலை… 24 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை!!

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரியில் பெங்களூரில் நிகழ்ந்த இதுபோன்ற இரண்டு வழக்குகளுடன் இந்த வழக்கு தொடர்புடையது அல்ல என்றும் போலீசார் தெளிவுபடுத்தினர்.

கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஆனேக்கல்லில் ஏசி மெக்கானிக்காகப் பணிபுரிந்த இன்டிகாப் என்பவரின் மனைவி தமன்னா (வயது 27) என்றும், இந்த வழக்கில் பெங்களூருவில் கூலி வேலை செய்து வரும் கமல் (வயது21), தன்வீர் (வயது 28), ஷாகிப் (வயது 25) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி இன்டிகாப்பின் சகோதரர் நவாப் என்றும், அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சினிமாவை மிஞ்சிய சம்பவம்: பரமக்குடியில் துப்பாக்கி முனையில் தொழிலதிபரை காரில் கடத்திய கும்பல்!!
 

Follow Us:
Download App:
  • android
  • ios