இமாச்சலப்பிரதேசத்தில் உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆஸ்திரேலியா நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூ.4,000 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அடல் சுரங்கப்பாதையின் சிறப்பு அம்சங்கள்;-

* அவசர கால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள்

* ஒவ்வொரு 60 மீ. இடைவெளியில் தீ அணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு 500 மீ. இடைவெளியில் அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

* குதிரை கால் லாடத்தை போல யு வடிவத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு 2.2 கிமீ தூரத்தில் சாலை திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* ஒவ்வொரு 1 கிமீ தூரத்தில் காற்று தர கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.

* 250 மீட்டர் இடைவெளிக்கு ஒரு சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது.

* இந்த சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.

* வெளிச்சம் ஏற்படுத்துதல் / பயண வழிகாட்டி பலகைகள் 25 மீட்டர் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ளன.

*சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 2000 ஆண்டு ஜூன் 3ம் தேதி ரோதங் சுரங்கப் பாதையை அமைப்பதற்கு முடிவு செய்தார். 2002ம்  ஆண்டு மே 26ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இது பயன்பாட்டுக்கு வருகிறது. கடந்த 2019ம்  ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ரோதங் சுரங்கபாதைக்கு, ‘அடல் சுரங்கப்பாதை’ என பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.