சத்தீஸ்கர் மாநிலத்தில், 70 வயதை கடந்த ஆணும், பெண்ணும் தங்கள் பேரன், பேத்திகளின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாஸ்பூர் மாவட்டம் பாக்தோல் கிராமத்தை சேர்ந்தவர் ராதியா ராம் (வயமு 75). அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஜிம்னாபாரி பாய் (70).

இவர்கள் கார்வா என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இருவரும் பல ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்தனர்.

15 நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இருவரும் முதல் முறையாக சந்தித்து கொண்டனர்.

தன் வீட்டிற்கு வரும்படி ஜிம்னாபாரியை ராம் அழைக்க, அவரும் அதை ஏற்று அந்த வீட்டிற்கு சென்றார். இருவரும் ஒன்றாக வாழ தொடங்கினர்.

சில நாட்களுக்கு பிறகு தான் இந்த விஷயம் கிராம மக்களுக்கு தெரிந்தது. அவர்கள் ஒன்று கூடி இந்த விவகாரம் குறித்து பேசினர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம் என அப்போது முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு ராம் மற்றும் ஜிம்னாபாரியின் பேரன், பேத்திகள் ஒப்புக் கொண்டனர். அதன்படி, இருவரின் திருமணமும் கிராம மக்களின் உற்சாக ஏற்பாட்டில் கோலாகலமாக நடந்தது.