Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக தேர்தல்.. ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா கருத்துக்கணிப்பு.. மண்டல வாரியான முடிவுகள் இதோ..

ஏசியாநெட் நியூஸ் இணைந்து நடத்திய 2-வது தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

asianetnews jan ki baat second opinion poll: regionwise numbers of BJP, congress, JDS in Karnataka assembly election 2023
Author
First Published May 4, 2023, 7:43 PM IST

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே  உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பல தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவியதும் தெரியவந்தது.

இந்நிலையில் ஜன் கி பாத் மற்றும் ஏசியாநெட் நியூஸ் இணைந்து நடத்திய 2-வது தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. சுமார் 30,000 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பாஜக 100 முதல் 114 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 20 - 26 இடங்களிலும் மற்ற கட்சிகள் 05 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல வாரியாக எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற கணிப்பும் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க : ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா சர்வே: கர்நாடகா தேர்தல் களம் மாறுகிறதா? பாஜகவுக்கு கைகொடுக்கும் 2 மண்டலங்கள்!!

பழைய மைசூர் மண்டலம்  (57):

பாஜக - 14

காங்கிரஸ் - 26

மதச்சார்பற்ற ஜனதாதளம் - 17 

asianetnews jan ki baat second opinion poll: regionwise numbers of BJP, congress, JDS in Karnataka assembly election 2023

ஹைதராபாத் கர்நாடகா (40)

பாஜக - 16

காங்கிரஸ் - 21

மதச்சார்பற்ற ஜனதாதளம் - 03

asianetnews jan ki baat second opinion poll: regionwise numbers of BJP, congress, JDS in Karnataka assembly election 2023

பெங்களூரு மண்டலம் (32) :

பாஜக - 15

காங்கிரஸ் - 14

மதச்சார்பற்ற ஜனதாதளம் - 03

மற்றவை - 0

asianetnews jan ki baat second opinion poll: regionwise numbers of BJP, congress, JDS in Karnataka assembly election 2023

மத்திய கர்நாடகா (26) :

பாஜக - 13

காங்கிரஸ் - 11

மதச்சார்பற்ற ஜனதாதளம் - 02

asianetnews jan ki baat second opinion poll: regionwise numbers of BJP, congress, JDS in Karnataka assembly election 2023

மும்பை கர்நாடகா (50)

பாஜக - 31

காங்கிரஸ் - 18

மதச்சார்பற்ற ஜனதாதளம் - 01

asianetnews jan ki baat second opinion poll: regionwise numbers of BJP, congress, JDS in Karnataka assembly election 2023

முன்னதாக கடந்த 2018 தேர்தல், 2019 மக்களவை தேர்தல் உள்ளிட்ட 36 இந்திய தேர்தல் முடிவுகளை ஜன் கி பாத் - ஏசியாநெட் கருத்துக்கணிப்பு முடிவுகள் துல்லியமாக கணித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கடலோர கர்நாடகா (19) : 

பாஜக : 15

காங்கிரஸ் : 4 

மதச்சார்பற்ற ஜனதாதளம் : 0

asianetnews jan ki baat second opinion poll: regionwise numbers of BJP, congress, JDS in Karnataka assembly election 2023

இதையும் படிங்க : கர்நாடகாவில் அனுமன் ஆயுதம் பாஜகவுக்கு கை கொடுக்குமா? ஜன் கி பாத் - ஏசியாநெட் நியூஸ் சர்வே முடிவுகள்

Follow Us:
Download App:
  • android
  • ios