Arif Khan:கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கம்: பினராயி அரசு அதிரடி

கேரள ஆளுநர் ஆர்பி முகமது கானை, பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள அரசு நீக்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Arif Mohammad Khan, Governor of Kerala, has been dismissed as Chancellor

கேரள ஆளுநர் ஆர்பி முகமது கானை, பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள அரசு நீக்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கேரள அரசு நேற்று அவசரச் சட்டம் பிறப்பித்த உடனேயே ஆளுநர் ஆரிப் முகமதுகானை வேந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!!

கேரளாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசுக்கும் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் நீடித்து வந்தது. 

பல்கலைக்கழங்களுக்கு, துணை வேந்தர்களை நியமனத்தில் ஊழல்கள் நடந்ததாக ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டினார். கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க குறைந்தபட்சம் 3 பேரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 11 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கும்,11 பேரை மட்டுமே பரிந்துரை செய்த கேரள அரசு குறித்து ஆளுநர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஆளுநரின் முடியைத் தொட்டால்கூட கேரள அரசைக் கலைக்யுங்கள்!சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. துணை வேந்தர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஆளுநர் உத்தரவை ரத்து செய்யவும் மறுத்துவிட்டது. இதையடுத்து, அனைத்து  பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானை அந்தப் பதவியிலிருந்து நீக்க கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்தது.

இதையடுத்து, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை கடந்த 9ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் அவசரச் சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, கேரளாவில் உள்ள கலாச்சாரத்துறைக்கான கலா மண்டலம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து ஆரிப் முகமது கான் நீக்கி கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முற்றிய வார்த்தைப் போர்! அமைச்சர் பாலகோபாலை நீக்குங்கள்: பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் கடிதம்

கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர் பிந்து கூறுகையில் “ கலா மண்டலத்தின் வேந்தர் பதவிக்கு புதிய வல்லுநர் ஒருவர் நியமிக்கப்படுவார். உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios