கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் தலை முடியைத் தொட்டால்கூட கேரள அரசைக் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் தலை முடியைத் தொட்டால்கூட கேரள அரசைக் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கும், ஆளுநர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதிகாரத்தில் ஆளுநர் மாளிகை பெரிதா அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசு பெரிதா என்ற வகையில் கேரள அமைச்சர்களும், ஆளுநர் முகமது ஆரிப் கானும் சளைக்காமல் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக சைபர் ராணுவம்! பாகிஸ்தானுக்கு துருக்கி ரகசிய உதவி

இதில் உச்ச கட்டமாக சமீபத்தில் கேரள அமைச்சர் பாலகோபால் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ஆளுநரின் பெயர் குறிப்பிடாமல் பேசுகையில் “ உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து பழகியவர்களால், வந்தவர்களால் ஜனநாயகம் மிகுந்த கேரளாவில் பல்கலைக்கழக செயல்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியாது.
முற்றிய வார்த்தைப் போர்! அமைச்சர் பாலகோபாலை நீக்குங்கள்: பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் கடிதம்
பனாராஸ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களுக்கு கூட 50 முதல் 100 பேர் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதுபோன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கேரள பல்கலைக்கழங்கள் செயல்பாட்டை புரிந்துகொள்வது கடினம்” எனத் தெரிவித்தார்.
இந்த பேச்சுக்கு கடும் அதிருப்தியும், கண்டனத்தையும் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து பாலகோபாலை நீக்க வேண்டும் எனக் கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், முதல்வர் பினராயி விஜயனோ, “ நிதிஅமைச்சர் பாலகோபால் தவறாக ஏதும் பேசவில்லை எனக் கூறி பதவி நீக்கம் செய்ய முடியாது” எனத் தெரிவித்துவிட்டார்.
ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை
கேரள ஆளுருக்கும், அரசுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், எரியும் தீயில் எண்ணெய் வார்க்கும் விதத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்து கொளுத்திப்போட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்தியில் அரசியலமைப்புச் சட்டத்தையும், குடியரசுத் தலைவரையும் கேரள ஆளுநர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்ட்கள் உணரட்டும். ஆளுநரின் முடியைத் தொட்டால்கூட கேரள அரசை கலைக்க மோடிஅரசு தயாராக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
