உலகின் மிகவும் உயரமான, நீளமான அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்  பிரதமர் மோடி. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இந்த சுரங்கப்பாதை 9.02 கிலோ மீட்டர் நீளம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் அதி நீள சுரங்க பாதையாக உருவாகி இருக்கிறது அடல் சுரங்க பாதை. மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது. 

கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார்  6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கபாதையால் இனி ஆண்டு தோறும் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெறும் என்கின்றனர் அதிகாரிகள்.

மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும், பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதாகவும் இது இருக்கும். அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனையப் பகுதி, 3,060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனைய பகுதி 3,071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது. 

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5 புள்ளி 525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம். இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

 

தினமும் 3,000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும் வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு 1 கிமீ தூரத்தில் காற்று தர கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது. 250 மீட்டர் இடைவெளிக்கு ஒரு சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 500 மீ. இடைவெளியில் அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 60 மீ. இடைவெளியில் தீ அணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. குதிரை கால் லாடத்தை போல யு வடிவத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 2.2 கிமீ தூரத்தில் சாலை திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்கள் 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.