ஆப்பிள் சிஇஓ டிம் குக் இந்தியா வருகை: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருடன் சந்திப்பு!!
இந்திய வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இந்திய பிரதமர் மோடியை சந்தித்ததை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசினார்.
இந்திய வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இந்திய பிரதமர் மோடியை சந்தித்ததை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசினார். முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்த டிம் குக், அது குறித்து டீவீட் செய்திருந்தார். அதில், இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தைப் பற்றிய உங்கள் பார்வையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நாடு முழுவதும் முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளோம். அன்பான வரவேற்புக்கு நன்றி பிரதமர் மோடி. கல்வி-மேம்பாட்டாளர்கள் முதல் உற்பத்தி-சுற்றுச்சூழல் வரை, உங்கள் பார்வை தொழில்நுட்பம் இந்தியாவின் எதிர்காலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.
டிம் குக்கை சந்தித்தது குறித்து டீவிட் செய்திருந்த பிரதமர் மோடி, இந்தியாவில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப மாற்றம் குறித்து ஆப்பிள் சிஇஓ டிம் குக்குடன் நேர்மறையான விவாதம் நடத்தினேன். இந்த நேரத்தில் நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி, இந்தியாவில் நிகழும் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து டிவீட் செய்துள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் மற்றும் அவரது குழு, இந்தியாவின் டிஜிட்டல் பயணத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்ததில் மகிழ்ச்சி. உற்பத்தி, ஏற்றுமதி, இளைஞர் திறன் மேம்பாடு, ஆப்ஸ், புதுமை பொருளாதார விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து விவாதித்தோம் என்று தெரிவித்துள்ளார்.