Asianet News TamilAsianet News Tamil

வாக்காளர் அட்டையுடன் அதார் இணைப்பு.. கட்டாயமா..? விரைவில் அறிவிப்பு.. முன்னாள் தேர்தல் கமிஷனர் பேட்டி..

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும் என்று தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற சுஷில் சந்திரா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 
 

Announcement coming soon to link Aadhaar with Voter ID card - Former Chief Election Commissioner
Author
India, First Published May 15, 2022, 9:49 AM IST

தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த சுஷில் சந்திரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். புதிய தேர்தல் ஆணையராக ராஜூவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர் அட்டையில் இரண்டு முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை என்னுடைய பதவி காலத்தில் எடுக்கப்பட்டதில் பெருமை அடைவதாக கூறினார்.

இதற்கு முன்னதாக 18 வயதிற்கு மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு இருந்தது. ஆனால் புதிய வாக்காளராக பதிவு செய்பவர்களுக்கு ஆண்டிற்கு 4 முறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரைத்தோம். தற்போது இது தொடர்பான மசோதா நிறைவேறியுள்ளது. விரைவில் இது நடைமுறை வரும் என்று எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார். 

மேலும் படிக்க: திரிபுரா புதிய முதல்வர் நியமனம்.. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் திடீர் மாற்றம்

அடுத்தது போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விபரங்களை இணைப்பது தொடர்பாக நடமுறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறினார். இதன் வாயிலாக, வாக்காளர்களுக்கு அதிக சேவைகளை வழங்க வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என்றாலும்  ஆதார் விபரங்களை இணைக்காததற்கு நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், தன்னுடைய பதவிக் காலத்தில் சந்தித்த மிக பெரிய சவால் உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்கள் சட்டமன்ற தேர்தல் நடத்தியது தான் என்று தெரிவித்தார். கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்த சவாலை சிறப்பாக கையாண்டவதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: இந்தி ஒரு நாட்டின் மொழி.. ! ”ஒரே நாடு.. ஒரே மொழி..” அமைச்சர் பொன்முடிக்கு பதிலடி கொடுத்த சிவசேனை எம்.பி..

Follow Us:
Download App:
  • android
  • ios