திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவருக்குப் பதிலாக அம்மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹாவை புதிய முதலமைச்சராக பாஜக நியமித்துள்ளது.
புதிய திரிபுரா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சஹா, கடந்த மாதம் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு, பாஜகவின் திரிபுரா மாநிலத் தலைவராகவும் உள்ளார். பாஜக ஆளும் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேப் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் எஸ்.என். ஆர்யாவிடம் இன்று சமர்ப்பித்தார்.முன்னதாக ராஜ்பவனில் ஆளுநரின் சந்திப்புக்கு பின், ராஜினாமா செய்துள்ளதை தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மாநிலத்தில் கட்சியின் அடிதளத்தை பலப்படுத்த உழைக்க வேண்டும் என்பதே கட்சி என்னிடம் விரும்புகிறது” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் "எல்லாவற்றையும் விட கட்சி மேலானது. நான் பாஜகவின் விசுவாசி. பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் சரி அல்லது திரிபுரா முதல்வராக இருந்தாலும் சரி. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளுக்கு நான் நியாயம் செய்துள்ளேன் என்று நம்புகிறேன். திரிபுரா மற்றும் மாநில மக்களுக்கு அமைதியை உறுதி செய்வதற்காகவும் மாநிலத்திம் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நான் உழைத்தேன்" என்று கூறினார்.

அதோடுமட்டுமல்லாமல் மாநிலத்தில் பா.ஜ.க வின் அடித்தளத்தை வலுப்படுத்த, அடிமட்ட அளவில் பல்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜ.க., ஆட்சி அமைக்க முதல்வர் பதவியில் இருப்பதை விட, கட்சி ஊழியராக இருந்தே பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக அம்மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப்லாப் தேப் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்க சாஹாக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமையின் கீழ் திரிபுரா செழிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: திரிபுரா புதிய முதல்வர் நியமனம்.. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் திடீர்..
