கணவரை விட்டு FB நண்பரை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்.. தவறாக பரவிய செய்தி - வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி
அஞ்சு மீண்டும் இந்தியா வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தில் அவருடைய கணவர் பரிதவித்து நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.
தனது பேஸ்புக் மூலம் சந்தித்த ஒரு நண்பரை காண, உரிய ஆவணங்கள் பெற்று பாகிஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு சென்றுள்ளார் 34 வயதுள்ள அஞ்சு என்று திருமணமான பெண். பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது நபரும், அஞ்சுவும் கடந்த 2019ம் ஆண்டு பேஸ்புக்கில் நண்பர்களானார்கள். இந்நிலையில் அவரை காண செல்லுபடியாகும் பாகிஸ்தான் விசாவில் அஞ்சு அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள தனது கணவனை விட்டுவிட்டு அஞ்சு பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாகவும். அவர் மீண்டும் இந்தியா வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தில் அவருடைய கணவர் பரிதவித்து நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில், தங்கள் நட்பில் காதல் என்ற கோணத்திற்கே இடமில்லை என்றும், வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அவர் விசா காலம் முடிந்ததும் அஞ்சு இந்தியா திரும்புவார் என்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் நஸ்ருல்லா என்ற அந்த இளைஞர். பாகிஸ்தானில் உள்ள மாவட்ட காவல்துறை அதிகாரி முஷ்தாக், நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அலுவலகத்தில் அஞ்சுவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
ஓப்பன்ஹெய்மர் சர்ச்சை: அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை?
மேலும் அஞ்சுவின் பயண ஆவணங்களை சரிபார்த்துள்ளார், அதன் அடிப்படையில் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அஞ்சு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக நஸ்ருல்லா கூறியுள்ளார்.
அவ்வூர் கிராமவாசிகள், மிகவும் மத நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், இந்த சம்பவத்தால் தங்கள் சமூகத்திற்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிட கூடாது என்றும், அஞ்சு பாதுகாப்பாக இந்தியா திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ராஜஸ்தானில் இருக்கும் அஞ்சுவின் கணவர் அரவிந்த், தனது மனைவி விரைவில் இந்தியா திரும்புவார் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
ஆறு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்.. பரபரப்பான நீதிமன்றம் - தேடுதல் பணி தீவிரம்!