ஆறு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்.. பரபரப்பான நீதிமன்றம் - தேடுதல் பணி தீவிரம்!
கர்நாடகாவில் 6 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, Whatsapp மூலம் கொலை மிரட்டல் வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் செய்தி தொடர்பு அதிகாரி, அவர் உட்பட பல நீதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்ததையடுத்து, மத்திய CEN குற்றப்பிரிவு காவல் நிலையம் அந்த அடையாளம் தெரியாத சந்தேக நபர்களுக்கு எதிராக தற்போது FIR தாக்கல்செய்துள்ளது.
கடந்த ஜூலை 14ம் தேதி அன்று கே. முரளிதர் என்பர் தான் இந்த புகாரை அளித்தார். அவர் அளித்த புகாரில் கடந்த ஜூலை 12ம் தேதி அன்று இரவு 7 மணியளவில், ஒரு சர்வதேச எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் அவருக்கு மிரட்டல் செய்திகள் வந்துள்ளன. அவருக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணுக்கு அந்த மெசேஜ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian Railway : வருகிறது மலிவு விலை ரயில் சேவை.. இரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் - முழு விபரம்
இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வந்த அந்த மிரட்டல் செய்தியில், முரளிதர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி முகமது நவாஸ், நீதிபதி எச்.டி.நரேந்திர பிரசாத், நீதிபதி அசோக் ஜி நிஜகன்னவர் (ஓய்வு), நீதிபதி ஹெச்.பி.சந்தேஷ், நீதிபதி கே.நடராஜன் மற்றும் நீதிபதி பி.வீரப்பா (ஓய்வு) ஆகிய 6 பேருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள வங்கிக் கணக்கில் ரூபாய் 50 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டல் செய்தியும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 506, 507 மற்றும் 504 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 75 மற்றும் 66 (F) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மர்ம நபர்கள் பற்றிய கூடுதல் தகவல் அறிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.