Asianet News TamilAsianet News Tamil

கருப்பாக இருந்ததால் தனது 18 மாத மகளுக்கு விஷம் கொடுத்த கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

கருப்பாக இருந்ததால் தனது 18 மாத மகளுக்கு தந்தையே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Andhra Man Poisons 18-Month-Old Daughter For Being Dark-skinned Rya
Author
First Published Apr 8, 2024, 11:25 AM IST

தனது 18 மாத குழந்தை கருப்பாக இருந்ததால் தந்தையே தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கரேம்பூடியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.  பெடசன்னேகண்ட்லா என்ற கிராமத்தில் மகேஷ் என்பவருக்கு ஷ்ரவாணி என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தை கருப்பாக இருப்பதாக கூறி ஷ்ரவாணியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தனது குழந்தை கருப்பாக இருந்ததால் அதற்உ விஷம் கலந்த பிரசாதத்தை ஊட்டியதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி அந்த குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டது என்றும் அந்த குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காரேம்பூடி அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது., அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வலிப்பு ஏற்பட்டதாக இறந்ததாகக் கூற மகேஷ் மனைவி ஷ்ரவாணியை சமாதானப்படுத்தினார்.

ஓடிப்போன மகன்... தாயை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்று பழிதீர்த்த கும்பல்...

மேலும் குழந்தையின் உடல் அவசர அவசமாக மகேஷ் புதைத்துள்ளார். எனினும் ஷ்ரவணியின் தாய் சந்தேகமடைந்து, இந்த விஷயத்தை உள்ளூர் பஞ்சாயத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஷ்ரவானி உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

வாட்ஸ்அப் கால் மூலம் வரும் ஆபத்து! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை! நம்பரை பார்த்து சுதாரிச்சுக்கோங்க...

அதில் பல அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அதன்படி ஏற்கனவே பல முறை மகேஷ் தனது குழந்தை அக்‌ஷயாவை கொலை செய்ய முயன்றதாகவும், ஒருமுறை குழந்தையை சுவரில் தூக்கி எறிந்ததாகவும், அறையில் பூட்டி வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொல்ல முயன்றதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையின் முடிவில் இந்த கொலைக்கான காரணம் பற்றி தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios