Asianet News TamilAsianet News Tamil

ஓடிப்போன மகன்... தாயை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்று பழிதீர்த்த கும்பல்...

அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, தனது ஆடைகளை கிழித்து வெளியே நடமாட வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் பொலீசாரிடம் கூறியுள்ளார். அந்த பெண்ணுடன் தனது மகன் ஓடிப்போனதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

55-year-old woman stripped, paraded in Punjab, 3 held sgb
Author
First Published Apr 7, 2024, 6:45 PM IST

பஞ்சாபில் ஒரு கிராமத்தில் 55 வயது பெண்ணின் குர்தாவைக் கழற்றி, ஆடையின்றி பொதுவெளியில் வற்புறுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மார்ச் 31 ஆம் தேதி தர்ன் தரன் என்ற கிராமத்தில் இந்த அவலச் சம்பவம் நடந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். சம்பவத்தின் வீடியோ ஆன்லைனில் வைரலாகப் பரவிய பின்பே போலீசாருக்கு அதுபற்றித் தகவல் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஓடிப்போனதற்காகப் பழிவாங்கும் வகையில் இந்தக் இழிவான செயலைச் செய்துகொள்ளனர் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் தலையிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

இளைஞரைக் கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்; உ.பி.யில் அட்டூழியம்!

55-year-old woman stripped, paraded in Punjab, 3 held sgb

பாதிக்கப்பட்டவரின் மகனின் மாமியார், அவரது மைத்துனர் மற்றும் மற்றொரு உறவினரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரையும் தேடி வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் மகன் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மார்ச் 31 அன்று அந்தப் பெண்ணின் தாய், சகோதரர் மற்றும் சகோதரர்கள் புதுமணத் தம்பதியின் தந்தை வீட்டிற்குச் சென்று வீட்டில் தனியாக இருந்த தாயுடன் தகராறு செய்தனர்.

பின் ஆத்திரத்தில் அவரது உடையைக் கழற்றி தெருவில் நடக்கச் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, தனது ஆடைகளை கிழித்து வெளியே நடமாட வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் பொலீசாரிடம் கூறியுள்ளார். அந்த பெண்ணுடன் தனது மகன் ஓடிப்போனதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எலான் மஸ்க்கை முந்திய மார்க் ஜூக்கர்பெர்க்! 2020க்குப் பின் முதல் முறை!

Follow Us:
Download App:
  • android
  • ios