மீண்டும் எலான் மஸ்க்கை முந்திய மார்க் ஜூக்கர்பெர்க்! 2020க்குப் பின் முதல் முறை!
இந்த ஆண்டு மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 48.4 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. ஆனால், ஜூக்கர்பெர்க்கின் சொத்து 58.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க், எலோன் மஸ்க்கை முந்தி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக உள்ளார். 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை மார்க் ஜூக்கர்பெர்க் முந்தியிருக்கிறார்.
டெஸ்லா நிறுவனத்துக்கு ஏற்பட்ட சமீபத்திய சவால்களால் எலான் மஸ்கின் சொத்துகள் சரிவடைந்துள்ளன. டெஸ்லா மலிவு விலை கார் மாடலை ரத்து செய்வது பற்றி தகவல் வெளியானதை அடுத்து டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி கண்டன. ஆனால், மஸ்க் அதனை மறுத்திருக்கிறார்.
இந்த ஆண்டு மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 48.4 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. ஆனால், ஜூக்கர்பெர்க்கின் சொத்து 58.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த காலாண்டில் வருவாயை அதிகரித்து இருப்பதன் காரணமாகவும் அவரது சொத்துகள் உயர்ந்துள்ளன.
யார் இந்த ஸ்ரீனிவாஸ் பாலியா? விப்ரோ சி.இ.ஓ. பதவியைப் பிடித்தவரின் பின்னணி என்ன?
மேலும், செயற்கை நுண்ணறிவில் மெட்டாவின் முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை இந்த ஆண்டு 49% உயர்ந்துள்ளது. S&P 500 இல் சிறந்த செயல்திறன் கொண்ட பங்குகளில் ஒன்றாகவும் மெட்டாவின் பங்குகள் உள்ளன.
கடந்த மாதம் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்கு மதிப்பு 29% சரிந்ததும் அவரது சொத்து மதிப்பு குறைய முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது. அவரது எக்ஸ் என்ற சமூக வலைத்தளத்திற்கு எலான் மஸ்க் கோரிய 55 பில்லியன் டாலர் இழப்பீடை டெலாவேர் நீதிமன்றம் நிராகரித்துள்ளநு. இதுவும் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
2022ஆம் ஆண்டு ட்விட்டரைக் கையகப்படுத்திய எலான் மஸ்க், அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றியது உள்பட ஏடாகூடமான பல மாற்றங்களைச் செய்துள்ளார். இதனால், ட்விட்டர் தனது விளம்பரதாரர்களைத் தக்கவைக்க போராடி வருகிறது. இதுவும் எலான் மஸ்க் அடைந்துள்ள இழப்புக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
மூணு மாசத்துல 40 பில்லியன் டாலர் நஷ்டம்! அசால்ட்டாக இருந்து கோட்டை விட்ட எலான் மஸ்க்!