துபாயில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா.. அவங்க போட்டுருக்க ப்ளூ Dressன் விலையை கேட்டால் ஆடிப்போயிருவீங்க!
அனந்த் அம்பானி தனது வருங்கால மனைவி ராதிகாவுடன் தற்பொழுது துபாயில் தங்களுடைய ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்திய அளவில், ஏன் உலக அளவில் மிகுந்த செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்று அம்பானியின் குடும்பம். முகேஷ் அம்பானியின் இரண்டு மகன்களான ஆகாஷ் மற்றும் அனந்த் அம்பானி ஆகிய இருவரும் தந்தைக்கு நிகராக தற்பொழுது புகழ்பெற்று வருகின்றனர்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி தனது பருமனான உடலால் பெரிதும் கிண்டலுக்கு உள்ளானார். மேலும் அவருக்கு ஆஸ்துமாவும் இருந்து வந்தது, இந்த சூழலில் தான் கடந்த 2016ம் ஆண்டு அனைவரும் வியக்கும் வண்ணம் சுமார் 108 கிலோ எடையை குறைத்தார் அனந்த்.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது அவர் மீண்டும் பழைய உடல் நிலைக்கு மாறியுள்ளார். இந்நிலையில் அனந்த் அம்பானி தனது வருங்கால மனைவி ராதிகாவுடன் தற்பொழுது துபாயில் தங்களுடைய ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : அது நடந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15 ஆக குறையும்.
துபாய் நாட்டில் உள்ள சில வணிக பிரமுகர்களுடன் அவர்கள் இருவரும் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் ஹைலைட் என்னவென்றால் அனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா அணிந்திருக்கும் அந்த நீலநிறை உடைதான்.
வெளியான அறிக்கையின்படி, அது ஒரு பிரெஞ்சு நாட்டு ஆடம்பர பிரண்டை சேர்ந்த ஆடையாம். இந்த ஆடையின் விலை சுமார் 3500 யூரோவாம், சராசரியாக இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பில் அது சுமார் 3,13,428 ரூபாய். சும்மா வாக்கிங் போக இத்தனை லட்சம் பெறுமானம் உள்ள ஆடையா என்று மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு: ராகுல் காந்தி!