Asianet News TamilAsianet News Tamil

டிரெண்டாகும் #Amazon_Insults_National_Flag..தேசியக் கொடியை அவமானப்படுத்திய அமேசான்.. வலுக்கும் கண்டனங்கள்..

இந்திய தேசியக் கொடி வண்ணங்கள் பதித்த டீ- சர்ட், டீ - கப், முககவசம்,சாக்லேட் போன்ற பொருட்களை குடியரசு தினத்தை முன்னிட்டு விற்பனை செய்து வரும் அமேசான் நிறுவனத்திற்கு, நாட்டுமக்களின் உணர்வுகளை அவமதித்ததாக தற்போது பல்வேறு கண்டன குரல்கள் எழுந்துள்ளது. 
 

Amazon once again embroiled in controversy
Author
Tamil Nadu, First Published Jan 24, 2022, 7:25 PM IST

இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். அவ்வப்போது, அமேசான் நிறுவனம் இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தேசியக் கொடி வண்ணத்தில் டோர்மெட் விற்ற விவகாரம் தொடர்பாக, சுஷ்மா சுவராஜிடம் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. தன்னுடைய இணையதளத்தில், இந்திய தேசியக் கொடி வண்ணத்திலான டோர்மெட் மற்றும் காலணிகளை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்தியர்கள், நாட்டு மக்களின் மரியாதைக்குரிய தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் இச்செயல் உள்ளது என்று கடும் கண்டனங்களில் டிவிட்டர் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இதையடுத்து, அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த செயல் இந்தியாவை அவமதிக்கும் செயல் என்றும், உடனடியாக அப்பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அந்நிறுவன ஊழியர்களுக்கு இந்திய விசா வழங்கப்படாது என்று எச்சரித்தார். இந்நிலையில் குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையை அமேசான் நிறுவனம், தனது கனடா இணையதளத்தில் இருந்து நீக்கியது. தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்காக சிறப்பு பொருட்கள் விற்பனை என்ற பெயரில் அமேசான் பதிவு செய்துள்ள விற்பனை பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் அதனை புறக்கணிக்க வேண்டுகோள் வைத்துள்ளனர்.  இந்திய தேசியக் கொடி பதித்த டீ-சர்ட், டீ கப், கீ செயின், சாக்லேட் போன்ற பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. 

தேசியக் கொடிச் சட்டம் 2002, அடையாளச் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையின்றி பயன்படுத்துவதைத் தடைசெய்யும்) சட்டம் -1950, தேசிய மதியாதைக்குரியவற்றை இழிவுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் - 1971, இவை போன்ற வேறு சட்டங்களின் அத்துமீறக்கூடாது என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய தேசிய கொடி வண்ணங்கள் பதித்த டீ- சர்ட், முககவசம், டீ - கப்,சாக்லேட் போன்ற பொருட்களை குடியரசு தினத்தை முன்னிட்டு விற்பனை செய்து வரும் அமேசான் நிறுவனத்தின் மீது உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன குரல் எழுந்துள்ளது. மேலும் #Amazon_Insults_National_Flag எனும் ஹஸ்டேக் டிரண்டாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios