கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். 

துபாயில் இருந்து கேரள மாநிலம் வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தின் நேற்று இரவு தரையிறங்கிய போது, ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் விமானம் உடைந்து 2 துண்டுகளானது. வெளிநாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் திட்டத்திற்காக அனுப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் 2 விமானி உள்ளிட்ட 18 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 6 சிப்பந்திகள் என மொத்தம் 195 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த விமான விபத்திற்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், ’’கேரள மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது, அப்பாவி உயிர்களை இழக்க வழிவகுத்துள்ளது. துயரமடைந்த குடும்பங்களுக்கு அவர்களின் கடினமான நேரத்தில் அல்லாஹ் பலம் தருவான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.