Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு காத்திருக்கிறது சவால் - பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்கட்சிகளிடம் கெஞ்சல்

all party-meeting-in-delhi
Author
First Published Jan 30, 2017, 11:31 AM IST


பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற வேண்டி, 

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில்அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

அக்டோபர் மாதம் வரை மாநிலங்களில் பெரும்பாலான திட்டங்களும், செலவினங்களும் தொடங்குவதில்லை 

என்றும் எல்லாவற்றிலும் தாமதம் ஏற்படுவதாகவும்கூறப்படுகிறது.

all party-meeting-in-delhi

இதனை சரிசெய்யும் வகையில், நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே பட்ஜெட்டை அமல்படுத்தும் விதத்தில், 

முன்கூட்டியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது எனமத்திய அரசு முடிவு செய்தது. 

மேலும், கடந்த 92 ஆண்டுகளாக ரயில்வே துறைக்கென தனியாக தாக்கல் செய்யப்பட்டு

 வந்த பட்ஜெட், பொது பட்ஜெட்டுக்கு முந்தையநாளில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை 

முடிவுக்கு கொண்டு வந்து, பொது பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட்டை 

all party-meeting-in-delhi

இணைத்துவிடவும் மத்திய அரசுதீர்மானித்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

நாளை மறுதினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி 

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்றுகூடுகிறது. 

இதில், பட்ஜெட் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தை  திரி ணாமூல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios