Asianet News TamilAsianet News Tamil

‘சைவ உணவையே வழங்குங்கள்’ - விமான நிறுவனங்களுக்கு ‘பீட்டா’ வலியுறுத்தல்

All airlines should provide vegetarian food for passengers traveling in all classes
All airlines should provide vegetarian food for passengers traveling in all classes
Author
First Published Jul 13, 2017, 9:37 PM IST


அனைத்து விமான நிறுவனங்களும், எல்லா வகையான வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் சைவ உணவுகளையே வழங்க வேண்டும் என்று விலங்குகள் நலன் அமைப்பான பீட்டா வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏர் இந்தியா நிறுவனம் சிக்கன நடவடிக்கையை காரணம் காட்டி, ‘எக்கானமி கிளாஸ்’ பிரிவில் பயணிக்கும் பயணிகளுக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்படாது என்று ெதரிவித்தது. அதைத் தொடர்ந்துபீட்டா இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக பீட்டா அமைப்பு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதி, சைவ உணவுகளையே பயணிகளுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து பீட்டா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, இறைச்சி, முட்டை, மற்றும் பால் பொருட்கள் பயன்படுத்துவது, பருவநிலை மாற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாகும். நாடுமுழுவதும் கடுமையான பஞ்சம், அனல்காற்று, மழையின்மை ஏற்பட பருவநிலை மாற்றமே காரணம்.

51 சதவீத கரியமில வாயு வௌியேற்றம்,  கால்நடைப் பண்ணைகள் அதிகப்பட்சமான நீர், நிலத்தையும் பயன்படுத்துவது பருவநிலை மாறுபாட்டுக்கு காரணமாகும். இறைச்சியையும், பால் பொருட்களையும் விமான நிறுவனங்கள் அனைத்து வகையான வகுப்புகளிலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நாட்டில் உள்ள19.4 கோடி மக்கள் இன்னும் போதுமான சரிவிகித உணவு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், உலகில் விளையும் தானியங்களில் 50 சதவீதம் பண்ணை கால்நடைகளுக்கு உணவாகத் தரப்படுகிறது. 

இறைச்சி, முட்டை, பால்பொருட்களை தொடர்ந்து மனிதர்கள் உட்கொள்வதால், இதயநோய், பக்கவாதம், உடல்பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மணிலால்வலியாட்டே கூறுகையில், “ அனைத்து விமானநிறுவனங்களும், ஏர் இந்தியாவின் உத்தரவைப் பின்பற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த, மனிதர்களுக்கு உகந்த, சத்தான சைவ உணவுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios