akash ambani engagement in mumbai

இந்தியாவில் மிகபெரிய தொழிலதிபரும், பணக்கார பட்டியலில் இடம்பிடித்தவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் அவரின் நீண்ட நாள் தோழியும், காதலியுமான ஷிலேகா மேத்தாவுக்கும் இன்று மிகவும் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குறிப்பாக நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைவான பாடகர் நிக் ஜோனஸ்சுடன் கலந்து கொண்டார். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்ட காதலை பிரியங்கா உறுதி செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

மேலும் இவர்கள் நிச்சயதார்த்தத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கவுரிகானுடன் கலந்து கொண்டார். அதே போல் ஆலியா பட், ரன்பீர் கபூர், மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.