இலவச டேட்டா.. நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி.. இன்னும் பல - வயநாட்டிற்காக களமிறங்கிய ஏர்டெல்!

Airtel for Wayanad : வயநாடு மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது பிரபல ஏர்டெல் நிறுவனம்.

Airtel announced offers for suffering people in wayanad ans

கேரளாவின் வயநாடு பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பலரும் கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட துவங்கியுள்ளனர். ஏற்கனவே கோலிவுட் மற்றும் மோலிவுட் திரையுலக நடிகர்கள், பெரும் தொகையை நிவாரண நிதியாக அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நேற்று புதன்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி "ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக தரப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் வேலிடிட்டி முடிந்த போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள், அன்லிமிடெட் கால்களை செய்துகொள்ளவும், அவர்கள் பணம் செலுத்த வேண்டிய தேதியை மேலும் 30 நாள்களுக்கு நீடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.  

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு; அமித் ஷா, பினராயி விஜயன் இடையே வார்த்தை போர்

இதுதவிர பாரதி மிட்டலுக்குச் சொந்தமான நிறுவனம், கேரளாவில் உள்ள தனது 52 சில்லறை விற்பனைக் கடைகளையும் உள்ளூர் நிர்வாகத்திற்கு ஆதரவாக நிவாரண சேகரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது என்ற அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Airtel announced offers for suffering people in wayanad ans

ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் 

வேலிடிட்டி முடிந்து, ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி இலவச மொபைல் டேட்டா வழங்கப்பட்டு, அவர்கள் வரம்பற்ற கால்களை செய்துகொள்ளவும் வழி செய்துள்ளது ஏர்டெல். மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அவர்களால் அனுப்பமுடியும் என்றும், இந்த சலுகை 3 நாள்களுக்கு செல்லுபடியாகும் எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவின் சாட்டிலைட் படங்களை வெளியிட்ட இஸ்ரோ! 8 கி.மீ. அடித்துச் செல்லப்பட்ட இடிபாடுகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios