Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு; அமித் ஷா, பினராயி விஜயன் இடையே வார்த்தை போர்
வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் 4 நாட்களுக்கு முன்னதாகவே மத்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெபி மாதர் வயநாட்டில் பேரிடர் ஏற்படும் முன்னதாக முறையான எச்சரிக்கை விடுக்க வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, வயநாட்டில் பேரிடர் ஏற்படுவதற்கு 7 நாட்கள் முன்பாகவே, அதாவது 23ம் தேதியே வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக 24, 25ம் தேதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 20 செ.மீ.க்கும் மேல் மழை பொழிய வாய்ப்பு இருப்பதால் நிலச்சரிவு அபாயமும் இருப்பதாக கடந்த 26ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
Wayanad Landslide பகுதிகளை பார்வையிட்ட ராகுல்காந்தி & பிரியங்கா காந்தி
மேலும் ஜூலை 23ம் தேதியே தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 9 குழுக்கள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும் மாநில முதல்வர் விழித்துக்கொள்ளவில்லை. முதல்வர் பினராயி விஜயன் முறையாக செயல்பட்டிருந்தால் பல உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். எனினும் கேரளா மாநிலத்திற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
Watch | ஹிமாச்சலில் மேக வெடிப்பு! - இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கட்டிடம்!
உள்துறை அமைச்சரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. ஆனால், அங்கு 500 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை காட்டிலும் பல மடங்கு அதிகம். மேலும் அம்மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.