மீண்டும் சீண்டிப் பார்க்கும் சீனா! அருணாச்சப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கு சீனப் பெயர் சூட்டி வரைபடம் வெளியீடு!

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சீனா அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 இடங்களை தங்களுடையவை என்று சொந்தம் கொண்டாடி அவற்றுக்கு சீன, திபெத்திய மொழிகளில் பெயரிட்டுள்ளன.

Ahead of SCO Defence Ministers' meeting, China 'renames' 11 places in Arunachal Pradesh

சீனா அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் பெயர் சூட்டியுள்ளது. மூன்றாவது முறையாக அரங்கேறியுள்ள சீனாவின் இந்த முயற்சி பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு முன் இந்தியாவைச் சீண்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்த 11 இடங்களை உள்ளடக்கிய அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் தெற்கு திபெத்தில் இருப்பதாகக் காட்டும் வரைபடத்தையும் சீனா வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகள் சீனாவின் ஜாங்னான் என்ற பகுதிக்குள் வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகருக்கு அருகில் உள்ள நகரமும் இடம் பெற்றுள்ளது.

ஊழல்வாதிகளில் ஒருவர்கூட தப்பிக்கக் கூடாது: சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு

பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவில் உரிமைகோரப்படும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், சீனா இந்த இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் அவற்றைத் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகிறது.

ஏப்ரல் 2ஆம் தேதி இந்த 11 இடங்கள் மறுபெயரிடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா இவ்வாறு இந்தியப் பகுதிகளுக்கு மறுபெயரிட்டுவது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன் 2017ஆம் ஆண்டில், சீன சிவில் விவகார அமைச்சகம் இதேபோன்ற ஆறு இடங்களின் பட்டியலை வெளியிட்டது. பின்னர் 2021ஆம் ஆண்டிலும் 15 இடங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது.

சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்தளை கண்டுபிடிப்பு! விண்வெளி ஆய்வில் ஒரு மைல்கல்!

சீனாவின் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதில் எதும் அளிக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் இதேபோல மறுபெயரிடும் அறிவிப்புகள் வெளியானபோது இந்தியா அதனை நிராகரித்துள்ளது.

2021ஆம் ஆண்டு சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு புதிய பெயர்களைக் கண்டுபிடிப்பது இந்த உண்மையை மாற்றாது” எனக் கூறியிருந்தார். 2017, 2021 இல் இதுபோன்ற பெயர்மாற்ற அறிவிப்பு வந்தபோது, வரலாறு மற்றும் நிர்வாக அடிப்படையில் அந்தப் பகுதிகள் ஜாங்கான் பிராந்தியத்துக்குச் சொந்தமானவை என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மே மாதம் கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சீனாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லி ஷாங்ஃபுவும் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங்கும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

விசாரணைக்கு ஆஜராகும் டிரம்ப்! தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios