விசாரணைக்கு ஆஜராகும் டிரம்ப்! தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை!
ஆபாச நடிகைக்கு பணம் வழங்கியது தொடர்பான வழக்கில் டொனால்ட் டிரம்ப் நாளை விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயக்கிழமை விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், மன்ஹாட்டன் கிரிமினல் நீதிமன்றப் பகுதிக்கு அருகே உள்ள சாலைகளில் நியூயார்க் நகர காவல்துறை தடுப்புகள் அமைத்துள்ளது.
அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் மீது முதல் முறையாக கிரிமினல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்படுகிறது. ஆபாச நட்சத்திரம் ஒருவருக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் டொனால்ட் டிரம்ப் முன்னான் ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் இருக்கும் படம் வெளியானது. இது தேர்தல் நேரத்தில் டிரம்ப்க்கு பின்னடவை ஏற்படுத்தியதால் ஸ்டோர்மிக்கு டிரம்ப் தரப்பில் 1.30 லட்சம் டாலர் பணம் கொடுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டப்படுகிறது.
சீனாவில் காதலில் விழுவதற்கு ஒரு வாரம் விடுமுறை! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்!
டிரம்ப் தன் மீதான குற்றச்சாட்டை ஒரு அரசியல் வேட்டை என்று விமர்சித்துள்ளார். மார்ஜோரி டெய்லர் கிரீன் உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் டிரம்ப் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து போராட்டம் நடந்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் விசாரணைக்கு ஆஜராவதை முன்னிட்டு நகருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் நியூயார்க் காவல் துறை கூறியுள்ளனர். சில சமூக ஊடக பயனர்கள் ட்ரம்பை தூக்கிலிட வேண்டும் என்று மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் மற்றும் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் என ஆன்லைன் பயங்கரவாதச் செயல்களைக் கண்காணிக்கும் அமெரிக்க புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த ட்ரம்ப் தான்தான் வெற்றி பெற்றதாக கூறியதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டது. ட்ரம்ப் ஆஜர்படுத்தப்படும் சூழலில் அதுபோன்ற அசம்பவாதிகள் நடைபெறாமல் இருக்க நியூயார்க் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கியில் இருவேறு வேலைவாய்ப்புகள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!