Asianet News TamilAsianet News Tamil

சீனாவில் காதலில் விழுவதற்கு ஒரு வாரம் விடுமுறை! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்!

சீனக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு காதலிக்க வசந்த கால விடுமுறையைக் கொடுக்கின்றன. நாட்குறிப்புகள் எழுதுதல், தனிப்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்தல் மற்றும் பயணங்களில் வீடியோ எடுத்தல் போன்றவை ஹோம்வொர்க்காக வழங்கப்பட்டுள்ளன.

China Colleges Give Students 7-Day Break To Fall In Love As Birth Rate Plummets: Report
Author
First Published Apr 2, 2023, 9:59 PM IST

வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதத்தை காப்பாற்றும் முயற்சியில், சீனாவில் உள்ள ஒன்பது கல்லூரிகள் ஒரு தனித்துவமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அந்தக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு "காதலிக்க" ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பது கல்லூரிகளில் ஒன்றான மியான்யாங் கல்லூரியில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை வசந்த கால விடுமுறை விடப்படுவதாக மார்ச் 21 அன்று அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், இந்த வசந்த கால விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் இதன் மலூம் காதலை அனுபவிக்க வேண்டும் என்றும் ஊக்குவிக்கப்படுத்தியுள்ளது.

மீன் உணவு பிரியர்களுக்கு எச்சரிக்கை! இந்த மீனைச் சாப்பிடும் முன் கொஞ்சம் யோசிங்க!

"மாணவர்கள் பசுமையான மலைகளையும் நீர்நிலைகளையும் பார்த்து வசந்தத்தின் சுவாசத்தை உணர முடியும் என்று நான் நம்புகிறேன். இது மாணவர்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு அவர்களின் உணர்வுகளையும் வளர்க்கும். அதுமட்டுமல்லாமல், வகுப்பறையில் கற்பித்தலைச் செழுமைப்படுத்தவும் ஆழப்படுத்தவும் உதவும்" என்று அந்தக் கல்லூரியின் துணை டீன் லியாங் குவோஹுய் சொல்கிறார்.

இந்த வசந்த கால விடுமுறை நாட்களில் நாட்குறிப்புகள் எழுதுதல், தனிப்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்தல் மற்றும் பயணங்களில் வீடியோ எடுத்தல் போன்றவை ஹோம்வொர்க்காக வழங்கப்பட்டுள்ளன.

வைர வியாபாரி போல நாடகமாடி ஒரு கோடி ரூபாய் வைரங்களைக் கொள்ளையடித்த 2 பேர் கைது

இது சீனாவில் குறையும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான முயற்சியாக இருந்தாலும், இதன் மூலம் மக்கள் தொகை குறைவதை மெதுவாக்க மட்டுமே முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளைக் கொண்டுவரவும் சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

1980 மற்றும் 2015 க்கு இடையில் குழந்தை பெறுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக சீனாவில் மக்கள்தொகை சரிவு ஏற்பட்டுள்ளது.  சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது. இது பதிவேட்டில் மிகக் குறைவு.இதுவே 2021 இல் 7.52 ஆக இருந்தது.

பாஜக ராம நவமி ஊர்வலத்தில் மீண்டும் வன்முறை: ஹவுராவைத் தொடர்ந்து ஹூக்ளியிலும் பதற்றம்!

Follow Us:
Download App:
  • android
  • ios