வரும் நாடாளுமன்ற  தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி அவர்களே பிரதமராக பொறுப்பேற்பார் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.

ஏழரை சனி காலத்தில் பிரதமர் பதவியை ஏற்றவர் மோடி என்றும், இது  அவருக்கு நல்ல புகழையும், நன்மையையும் செய்யும் என அவர் தெரிவித்து உள்ளார். மோடிக்கு அவருடைய 64  வயது வரை சூரிய திசை நடந்ததால் அது அவருக்கு மேலும் புகழை தேடி தருமாம். அதுமட்டுமல்லாமல் 74 வயது வரை சந்திர திசையும் நடப்பதால் அவருக்கு மென்மேலும் புகழ் அதிகரித்துக்கொண்டே கொண்டே செல்லுமாம்.

 

இதில் மேலும் உள்ள சிறப்பு தகவல் என்ன வென்றால் பாஜகவின் ஜனன  ஜாதகமும், மோடியின் ஜனன ஜாதகமும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஜாதகத்தின் படி மீண்டும் மோடியே பிரதமராக வருவார் என தெரிவித்து உள்ளார்.


 மேலும், தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும் பாஜகவிற்கு அது ஒரு பெரிய பின்னடைவாக இருக்காது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.