Asianet News TamilAsianet News Tamil

35 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்.. வெள்ள மீட்புப் பணியின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..

வெள்ள மீட்பு தன்னார்வலராக பணியாற்றிய ஜக்ஜித் சிங், 35 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயை சந்தித்தார்.

after 35 years man meets his mom during flood recue operations in punjab
Author
First Published Jul 28, 2023, 10:51 AM IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஅள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. ஆனால் இந்த வெள்ளப் பெருக்கு, ஒரு வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆம். வெள்ள மீட்பு தன்னார்வலராக பணியாற்றிய ஜக்ஜித் சிங், 35 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயை சந்தித்தார்.

கடந்த 20-ம் தேதி, பாட்டியாலாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் ஜக்ஜித் தனது தாயார் ஹர்ஜீத் கவுரை சந்தித்தார். தாயும் மகனும் கண்ணீருடன் கட்டிப்பிடித்து தங்களை அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த உணர்வுப்பூர்வ சந்திப்பை அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

ஜக்ஜித் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை இறந்துவிட்டார். அவரின் தாய் ஹர்ஜீத் மறுமணம் செய்து கொண்டார். ஜஜ்ஜித்தின் தாத்தா பாட்டி அவரை இரண்டு வயதில் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர் வளர்ந்ததும் அவனுடைய பெற்றோர் விபத்தில் இறந்து விட்டார்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் எதிர்பாராத திருப்பம் தாயையும், மகனையும் இணைத்தது. ஆம். ஜக்ஜித் சிங், காடியனில் உள்ள முக்கிய குருத்வாராவில் உள்ள பக்தி பாடகராக உள்ளார். சமீபத்திய பருவமழையால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு, மீட்புப் பணிக்காக பாட்டியாலா சென்றடைந்தார்.

ஜக்ஜித் சிங்கின் பாட்டி வீடு பாட்டியாலாவில் இருப்பதாக அவரது அத்தை கூறினார். அது போஹர்பூர் கிராமமாக இருக்கலாம் என்று தெளிவில்லாமல் கூறினார். ஜக்ஜித் விரைவில் போஹர்பூரை அடைந்து தனது தாய்வழி பாட்டி பிரீதம் கவுரை சந்தித்தார். இதுகுறித்து பேசிய ஜக்ஜித் 'நான் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு முதலில் சந்தேகம் இருந்தது. என் தாய் ஹர்ஜித் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்து ஒரு மகன் இருப்பதாகவும் கூறினார். நான் உடைந்துவிட்டேன். 30 ஆண்டுகளுக்கு மேல் தனது தாயை பார்க்காத அதிர்ஷ்டம் இல்லாத மகன் நான் தான்.” என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக ஜக்ஜித் தனது தாய் ஹர்ஜித் கவுரை சந்திக்க சென்றார். கால் வலியால் சரியாக நடக்க இயலவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகனைப் பார்த்த மகிழ்ச்சியை அவரால் அடக்க முடியவில்லை. அம்மாவைத் தொட்டு ஜக்ஜித் கதறி அழுதார். , 

5 ஆண்டுகளுக்கு முன்புதான் தனது தாயார் உயிருடன் இருக்கிறார் என்று ஜக்ஜித் தெரிந்து கொண்டார். ஜக்ஜித், 'எனக்கு அதிக தகவல் இல்லை. அவரைப் பற்றி அறிந்த அத்தகையவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். இரு வீட்டாரின் உறவுகளிலும் இப்படி ஒரு விரிசல் இருந்ததால், எனது தாய்வழி தாத்தா, பாட்டி தன் தாயைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.” என்று தெரிவித்தார்.

220 ஆண்டுகளாக பூட்டப்படாத வீடு.. தஞ்சையின் மற்றொரு வரலாற்று பொக்கிஷம்!

Follow Us:
Download App:
  • android
  • ios