நேற்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சரக்கு சேவை வரி தொடர்பான மசோதாக்கள், நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு மசோதா, மகப்பேறு சலுகை மசோதா, குடியுரிமை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில்,, இன்று 2வது நாளாக தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கமிட்டனர்.
பழைய நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
