பூமி, நிலவுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட வீடியோ.. நீங்களே பாருங்க..
ஆதித்யா விண்கலம் நிலவு, பூமியை படம் எடுத்து அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சூரியனை ஆய்வு செய்யும் கனவு திட்டமான ஆதித்யா எல்1 வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூமியின் புகைப்படம் மட்டுமின்றி பூமியில் இருந்து 3,84,000 கி.மீ தொலைவில் உள்ள நிலவின் புகைப்படத்தையும் ஆதித்யா விண்கலம் அனுப்பி உள்ளது. ஆதித்யா விண்கலம் எடுத்துள்ள புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் பூமியையும் நிலவையும் பார்க்க முடிகிறது. மேலும் பூமிக்கு முன்பு நிலவு ஒரு சிறிய புள்ளி போன்று தோற்றமளிக்கிறது.
தற்போது புவி சுற்றுப்பாதையில் 40,000 கி.மீ தொலைவில் ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது. வரும் 10-ம் சுற்றுவட்டப்பாதை தூரம் உயர்த்தப்படும். தொடர்ந்து சுற்றுவட்டப்பாதையின் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, அடுத்த 14 நாட்கள் பூமியின் சுற்றுவட்ட பாதையில் தான் ஆதித்யா விண்கலம் சுற்றும். அதன்பிறகே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அது அடையும்.
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை படம் பிடித்த நாசாவின் ஆர்பிட்டர் சாட்டிலைட்!
இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ள மொத்த தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இந்த இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் சூரியனை ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Aditya-L1
- ISRO
- aditya l1
- aditya l1 isro
- aditya l1 launch
- aditya l1 launch live
- aditya l1 launch video
- aditya l1 launching
- aditya l1 mission
- aditya l1 mission in hindi
- aditya l1 mission isro
- aditya l1 mission kya hai
- aditya l1 mission launch
- aditya l1 mission launch date
- aditya l1 mission reaction
- aditya l1 mission sun
- aditya l1 solar mission
- aditya mission
- isro aditya l1
- isro aditya l1 mission
- isro aditya l1 mission launch date
- isro sun mission aditya l1