"நான் Beef சாப்பிடுவேனா? எவ்ளோ ட்ரை பண்ணாலும் என் இமேஜை உடைக்க முடியாது" - வதந்திகளுக்கு Kangana பதிலடி!
Kangana Ranaut : பிரபல நடிகையும், அரசியல் தலைவருமான கங்கனா ரனாவத், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் சில வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கங்கனா ட்வீட்
“நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த வகையான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை, என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது, நான் பல தசாப்தங்களாக யோகம் மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்து வருகிறேன், இனி உங்களின் அத்தகைய தந்திரங்கள் வேலை செய்யாது. என் இமேஜை கெடுக்க முடியாது."
"என் மக்களுக்கு என்னைத் தெரியும், நான் ஒரு பெருமைமிக்க இந்து என்பது அவர்களுக்குத் தெரியும், அவர்களை தவறாக வழிநடத்த முடியாது, ஜெய் ஸ்ரீராம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியிருந்தார். அவருடைய இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரி அவர் இந்த பதிவை வெளியிடவேண்டிய அவசியம் என்ன?
திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரின் சவாலை ஏற்ற காங். சிட்டிங் எம்.பி. சசி தரூர்!
நடந்தது என்ன?
தான் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ரணாவத் ஒருமுறை கூறியதாக காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கையை கங்கனா வெளியிட்டுள்ளார். ஒரு பேரணியில் பேசிய மகாராஷ்டிர மாநில சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான வடேட்டிவார், ரனாவத் தான் மாட்டிறைச்சி விரும்புவதாகவும், அதை சாப்பிடுவதாகவும் தனது X- பக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரின் அந்த பதிவிற்கு தான் இப்பொது கங்கனா பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் அரசியலில் இணைந்த கங்கனா ரனாவத், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். வரவிருக்கும் லோக்சபா தேர்தல் 2024க்கு தயாராவதற்காக அவர் அண்மையில் ஒரு ரோட்ஷோ நடத்தினார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த 1987ம் ஆண்டு பிறந்த நடிகை கங்கனா ரணாவத், 2006ம் ஆண்டு முதல் பாலிவுட் உலகில் பயணித்து வருகின்றார். 2008ம் ஆண்டு வெளியான தாம் தூம், மற்றும் 2023ம் ஆண்டு வெளியான சந்திரமுகி 2 ஆகிய இரு படங்கள் தான் இவர் நேரடியாக தமிழில் நடித்த படங்களாகும்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிற்கு ஜாமீன் மறுப்பு!