தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிற்கு ஜாமீன் மறுப்பு!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது

Delhi rouse avenue court refuses to grant interim bail to telangana chandrasekhar rao daughter kavitha smp

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

போக்குவரத்து ஊழியர்கள், அரசுப் பணியாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு: அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கவிதாவின் பெயரும் நீண்ட நாட்களாக அடிபட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios