சந்திரயான் 3 குறித்து கிண்டல் பேச்சு.. ஸ்ரீ ராம் சேனா புகார் - பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு!
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்ட கார்ட்டூன் ஒன்றால், நெட்டிசன்கள் அவரை சாடி வந்த நிலையில், அவரை கைது செய்யுமாறு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் நடிகர் தான் பிரகாஷ் ராஜ். அவர் சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இந்திய பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜக கட்சிக்கு எதிராகவும் பேசி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வரும் பிரகாஷ் ராஜ், தற்போது சந்திரயான் 3 விண்கலத்தை ட்ரோல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கினார்.
இந்தியர்கள் பெருமைப்படும் ஒரு விஷயத்தை, சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருப்பவர் இவ்வாறு கிண்டல் செய்வது ஏற்புடையது அல்ல என்றும். அவரை கடுமையாக கண்டித்தும் தொடர்ச்சியாக பலர் பதிவுகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் ஒரு பதில் அளித்தார். அதில் "நான் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டது ஒரு பழைய ஆம்ஸ்ட்ராங் காலத்து ஜோக், அதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா?" என்று கேட்டுள்ளார். அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் எங்கு சென்றாலும் டீக்கடை வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வார்கள் என்று கூறுவார்கள். அதே போல நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்ற பொழுதும் கூட அங்கே ஒரு மலையாளத்து காரர் அங்கு டீ ஆதிக்கொண்டிருந்தார் என்று நகைப்புடன் கூறும் ஒரு பழைய ஜோக் உள்ளது.
இதை மேற்கோளிட்டு தான், பிரகாஷ் ராஜ் அப்படி கூறியதாக அவர் தெரிவித்த நிலையில், தற்போது பிரகாஷ் ராஜுக்கு புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. சந்திரயானை கேலி செய்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது ஸ்ரீராம் சேனை ஊழியர்கள் போலீசாரிடம் தற்போது புகார் அளித்துள்ளனர்.
பனஹட்டி காவல் நிலையத்தில் (பாகல்கோட் மாவட்டம்) அளிக்கப்பட்ட ஒரு புகாரில், SRS (Sri Ram Sene) தலைவர் சிவானந்த் கெய்க்வாட், நடிகர் பிரகாஷ் ராஜை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது சம்மந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் உறுதி அளித்த நிலையில், தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதபதவைக்கும் நிமிடங்கள்; நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிங்குவதில் என்ன சிக்கல்?